
15 மாதங்களுக்கும் மேலான போரை முடிவுக்குக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்தம் மற்றும் கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தம் எட்டப்பட்டதாக செய்தி பரவியபோது, பாலஸ்தீனிய மக்கள் கூசமிட்டு ,ஒருவரை ஒருவர் அரவணைத்து கொண்டாடினார்கள்.
மத்தியஸ்தரான கத்தார் புதன்கிழமை ஒப்பந்தத்தை அறிவித்தது, ஆனால் இஸ்ரேல் பல விஷயங்கள் "தீர்க்கப்படாமல் உள்ளன" என்றும், அவை விரைவில் இறுதி செய்யப்படும் என்று நம்புவதாகவும் எச்சரித்தது.
ஆனால் காசாவில் ஏற்கனவே கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன, அறிவிப்பைக் குறிக்க மக்கள் கூட்டம் கூட்டமாக கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
"ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்த இந்த துயரம்,கனவு இறுதியாக முடிவுக்கு வருகிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. நாங்கள் பலரை இழந்துவிட்டோம், எல்லாவற்றையும் இழந்துவிட்டோம்," என்று காசா நகரத்தில் மையத்தில் உள்ள நுசைராத் முகாமுக்கு இடம்பெயர்ந்த 45 வயதான ரண்டா சமீஹ் கூறினார்.
போரில் உயிரிழந்தவர்களில் பலர் சிகிச்சை பெற்று வரும் டெய்ர் எல்-பலாவின் அல்-அக்ஸா தியாகிகள் மருத்துவமனைக்கு வெளியே, நூற்றுக்கணக்கான பாலஸ்தீனியர்கள் கோஷமிட்டும், பாடியும், கொடிகளை அசைத்து இந்த மகிழ்ச்சியான செய்தியை கொண்டாடினார்கள்..
சிரித்த முகத்தோடு ஆண்களும் பெண்களும் அரபு மொழியில் "அல்லாஹு அக்பர்" என்று கோஷமிட்டு, பாலஸ்தீனக் கொடியை அசைத்து கொண்டாடினர்..
காசா நகரில், 27 வயதான அப்துல் கரீம், "நாம் இழந்த அனைத்தையும் மீறி, நான் மகிழ்ச்சியடைகிறேன்" என்று கூறினார்.
"நான் இறுதியாக என் மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் மீண்டும் பார்ப்பேன் என்று என்னால் நம்ப முடியவில்லை," என்று அவர் மேலும் கூறினார். "அவர்கள் கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்பு தெற்கே சென்றனர். இடம்பெயர்ந்தவர்கள் விரைவாகத் திரும்ப அனுமதிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்."
தெற்கு காசாவில் உள்ள கான் யூனிஸிலும் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர்,
புதன்கிழமை அறிவிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், பேரழிவிற்குள்ளான பாலஸ்தீனப் பிரதேசத்தில் சண்டையை நிறுத்தும் என்றும், இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பாலஸ்தீன கைதிகளுக்கு ஈடாக காசாவில் உள்ள கைதிகள் விடுவிக்கப்படுவதைக் காணும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments