
டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து முன்னாள் எம்.பி பர்வேஷ் வர்மாவை பாஜக களமிறக்கியுள்ளது.
70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. 70 தொகுதிகளுக்கும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
இந்நிலையில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் 29 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. கல்காஜி தொகுதியில் முதலமைச்சர் அதிஷியை எதிர்த்து முன்னாள் எம்.பி. ரமேஷ் பிதூரி போட்டியிடுகிறார். புதுடெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவாலை எதிர்த்து பர்வேஷ் சாஹிப் சிங் வர்மா களம்காண்கிறார்.
அண்மையில் ஆம் ஆத்மியில் இருந்து விலகி பாஜக-வில் இணைந்த கைலாஷ் கெலாட்டுக்கு, பிஜ்வாசன் தொகுதியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜகவின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலில் நான்கு சிட்டிங் எம்.எல்.ஏக்கள், இரண்டு முன்னாள் எம்.பிக்கள், 8 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இடம்பெற்றுள்ளனர்.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments