Ticker

6/recent/ticker-posts

Ad Code



விரைந்து வா ரமழானே!


கண்ணியம் நிறைந்த மாதமே! 
புண்ணியம் பூத்த ரமழானே! 
விண்ணகமும் மண்ணகமும்
உன் வரவால் அழகு பெறும்!

மென்மேலும் மெருகுபெறும்
சுவனத்தின் அலங்காரம்! 
நன்றே பூட்டப்படும்
நரகத்தின் வாயில்கள்!
விலங்கிடப்படும்
விரட்டப்பட்ட ஷைத்தான்!
விரைந்து வா ரமழானே!

பகலில் பக்குவமாய் 
பசியுடனே நோன்பிருந்து 
இரவில் இனிதே 
நின்று வணங்கிடவும் 
புனித குர்ஆனைநிதம் 
புரிந்து ஓதிடவும் 
விரைந்து வா ரமழானே!

அருள்நிறை முதல் பத்தும் 
மன்னிப்பின் ஈராம் பத்தும் 
எரிநரக விடுதலையின் 
இறுதிப் பத்தும் 
ஒருங்கே அடைந்திடவே 
ஓடோடி வா ரமழானே!

ஏழையின் பசியுணர்த்தி
ஈகைக் குணம் தந்து 
ஆன்மீகப் பயிற்சியுடன் 
ஈடேற்றம் பெற்றிடவே 
விரைந்து வா ரமழானே!

ஆவலாய் உன் வரவை 
ஆதரவு வைத்திங்கே 
பாவச் சுமைகளுடன் 
பேதலித்து நிற்கின்றேன்  
விரைந்து வா ரமழானே!

கல்ஹின்னை 
ஹில்மி ஹலீம்தீன் 


Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments