Ticker

6/recent/ticker-posts

ஹஜ் கோட்டா வியாபாரிகளுக்கு ஆப்பு வைத்த ஹஜ் கமிட்டி


இம்முறை ஹஜ் விவகாரத்தில் ஊழலை தடுக்க அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் சிறந்த நடைமுறைகள்.

இம்முறை ஹஜ் முகவர்கள் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளை சீர் செய்து, மொத்தமாக 93 ஹஜ் முகவர்கள் இம்முறை மக்களை ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்வதற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த காலங்களில் ஹஜ் விவகாரத்தில் ஏற்பட்ட மோசடிகளை தடுக்கும் விதமாக, புதிய ஹஜ் கமிட்டி மிகவும் நேர்மையான முறையிலும், சூட்சகமான முறையிலும் சில நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது.

கடந்த காலங்களில் ஹஜ் கோட்டாக்களை பெற்றுக் கொண்டு சில முகவர்கள், மக்களை ஹஜ்ஜுக்கு அழைத்துச் செல்லாமல், ஒரு ஒரு கோட்டா  மூன்று லட்சம் வரை விற்பனை செய்து ஒரு வியாபாரமாக செய்து வந்தனர். 

இதனால் மக்களுக்கு சிரமம் ஏற்பட்டதோடு, இந்த கோட்டாக்களை வாங்கிய ஹஜ் முடவர்கள், மேலதிகமாக ஹாஜிகளிடம்  மூன்று லட்சங்களை அறவிட வேண்டி வந்தது. 

இதனை தடுக்கும் விதமாக ஹஜ் கமிட்டி இம்முறை புதிய சிறந்த நடைமுறை ஒன்றைக் கை க்கொண்டுள்ளது.

இம்முறை ஒரு ஹஜ் முகவருக்கு குறைந்தபட்சம் 25 கோட்டா முதல், கூடியது 75 வரை மட்டுமே வழங்கப்படும். முன்னேய காலங்களைப் போல் நூற்றுக்கும் மேற்பட்ட கோட்டாக்கள் எந்த முகவருக்கும் வழங்கப்பட மாட்டாது. இந்த வரையறையும் அவர்களின் சேவை காலம், சிறந்த சேவைகள் போன்றவற்றை கருத்தில் கொண்டே தெரிவு செய்யப்பட்டுள்ளது.

திறந்த கோட்ட முறை ரத்து.

அதாவது ஒரு ஹஜ் முகவருக்கு 75 கோட்டார்கள் வழங்கப்பட்ட நிலையில், அந்த முகவர் 50  கடவுச்சீட்டுக்களை மட்டுமே சேர்த்துக் கொள்ள முடியுமாக இருந்தால், அந்த முகவர் ஹஜ் கமிட்டியின் முன்  அந்த 50 கடவுச்சீட்டுக்களையும் மட்டுமே சமர்ப்பித்து, அந்தந்த முகவர்களின் பெயரில், அந்தந்த கடவுச்சீட்டுக்கள் இலக்கத்துக்குரிய கோட்டாக்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.

குறித்த அந்த முகவரால் 50 கடவுச்சீட்டுக்களை மட்டுமே சேர்த்துக் கொள்ள முடிந்தது என்றால், அவருக்குரிய கோட்டாவாக 50 வீசாக்கள் மட்டுமே வழங்கப்படும். 

முன்னேய காலம் போல், மீதமுள்ள விசாக்களை ஏனைய முகவர்களுக்கு விற்பனை செய்யவோ கைமாற்றம் செய்யவோ முடியாது. 

குறிப்பிட்ட ஒரு ஹாஜி ஒரு முகவரிடம் பதிவுகளை செய்து, அவர் ஹஜ்ஜுக்கு செல்லவில்லை என்றால், அதற்குப் பதிலாக இன்னொருவரின் பெயரை பதிவு செய்யவும் இடமளிக்கப்பட மாட்டாது. அந்தத் தொகை அவரது கோட்டாவில் கழிக்கப்படும்.

ஹஜ்  கோட்டாக்களை பெற்று மக்களை ஹஜ்ஜுக்கு கொண்டு செல்லாமல் ஏனைய முகவர்களுக்கு கோட்டாக்களை  விற்று, மேலும் பல லட்சங்களை மக்கள் தலை மீது சுமத்தி அசாதாரணமான முறையில்,வியர்வை சிந்தாமல் வெள்ளிப் பணம் சம்பாதித்த முகவர்களுக்கு இது ஒரு சிறந்த பாடமாகும்.

இதனை கருத்தில் கொண்டு இம்முறை திறந்த கோட்ட முறை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.இது ஒரு மிகச்சிறந்த வழிமுறையாகும். 

இதனை எதிர்த்து. தங்களுக்கு திறந்த கோட்டா முறை வழங்கப்பட வேண்டும் என 17  ஹஜ் முகவர்கள் ஒப்பமிட்டு ஹஜ் கமிட்டிக்கு கடிதம் ஒன்றை வழங்கி உள்ளதோடு, இதனை எதிர்த்து தாங்கள் நீதிமன்றம் செல்ல இருப்பதாகவும், சில ஹஜ் முகவர்கள் letter dimand அனுப்பி உள்ளதாகவும் தெரிய வருகின்றது. 

என்ன அழுத்தங்கள் வந்த போதிலும் இம்முறையில் மாற்றம் செய்யப்பட மாட்டாது என்றும், எந்த அழுத்தங்களுக்கும் ஹஜ் கமிட்டி அடிபணிய போவதில்லை என்றும் முக்கியமான ஒருவர் தெரிவித்தார்.
இதே வேலை நேர்மையாக செயல்படக்கூடிய ஹஜ் முகவர்கள் இது ஒரு சிறந்த நடைமுறை என்றும், இம்முறையில் மாற்றம் செய்ய வேண்டாம் என்றும் ஹஜ் கமிட்டிக்கு தெரிவித்துள்ளதாகவும், அவர் குறிப்பிட்டார்

காலக்கெடு.

சகல ஹஜ் முகவர்களும் எதிர்வரும் ஜனவரி மாதம் பத்தாம் திகதிக்கு முன் சகல ஆவணங்களையும் சமர்ப்பித்து தங்களுக்குரிய கோட்டாக்களை பெற்றுக் கொள்ள வேண்டும். எதிர்வரும் 10 திகதிக்கு பிறகு வரும் எந்த ஆவணங்களுக்கும் ஹஜ் கோட்டா வழங்கப்பட மாட்டாது என, ஹஜ் கமிட்டி தெரிவித்துள்ளது.

ஹாஜிகளின் தெரிவு.

ஒரு ஹாஜி தான் 5000 ரூபாவை கட்டி,  தனக்குரிய கோட்டாவை பதிவு செய்து, அமான வங்கியில் 7.5 லட்சங்களை செலுத்தி,  இப்பற்றுச் சீட்டுகளை தான் விரும்பிய ஒரு முகவரிடம் கையளித்து தனது ஹஜ் பயணத்தை உறுதி செய்து கொள்ளலாம். இவ்விடத்தில் எந்த ஹஜ்முகவரும் எங்கும் எவருக்கும் எந்த அழுத்தங்களையும் செய்ய முடியாது.

இம்முறை சுயமாக ஹாஜிகளை சேர்த்துக் கொள்ள முடியாத ஹஜ் முகவர்கள், மக்களுக்கு சிறந்த ஹஜ் சேவையை வழங்க முடியாத முகவர்கள், மற்றும் மக்கள் விருப்பமற்ற ஹஜ் முகவர்கள் என கருத்தில் கொண்டு அடுத்த முறை அவர்களின் அனுமதிப்பத்திரம் ரத்துச் செய்யப்படும்.

அதேவேளை ஒரு ஹஜ் முகவருக்கு 30 கோட்டாக்கள் வழங்கப்பட்டு, அவர் 30 கோட்டாக்களையும் பெற, சகல ஆவணங்களையும் சமர்ப்பித்து தனக்குரிய கோட்டாவை நிறைவு செய்திருந்தால், அந்த முகவர் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்கிய, சிறந்த ஹஜ் முகவர் என கருதப்பட்டு அடுத்த முறை அவரது கோட்டாவை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

இந்த நிபந்தனையால் ஒவ்வொரு ஹஜ் முகவரும் ஹாஜிகளுக்கு சிறந்த சேவையை வழங்க வாய்ப்புள்ளது.

ஒரு ஹஜ்  முகவர் கூடுதலான கோட்டா இம்முறை வழங்கப்பட்ட நிலையில், அவர் குறைவான கோட்டாக்கலையே பூர்த்தி செய்து இருந்தால், அடுத்த முறை அவரது கோட்டாவை குறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.

முன்னைய காலங்களில் அமைச்சரை நெருங்கியவர்களுக்கு பரிசாகவும், தேர்தல் வெற்றிக்காக உழைத்தவர்களுக்கு உதவியாகவும் ஹஜ் கோட்டாக்கள் வழங்கப்பட்டது. இதை அவர்கள் பலற்சங்ளுக்கு
விற்று அசாதாரணமான முறையில் பணம் சம்பாதித்தார்கள். இத்தொகையும் ஹஜ் செல்லும் அப்பாவி வரிய மக்கள் தலையில் சுமத்தப்பட்டமை குறிப்பிடத்த விடயமாகும்.

மேலும் சென்ற காலங்களில் எந்தவித கல்வி அறிவுமற்ற, அமைச்சர்களின் போஸ்டர்களுக்கு பசை பூசியவர்கள் ஹஜ் கமிட்டி உறுப்பினர்களாக நியமிக்கப்படதும் சுட்டிக்காட்டப்பட வேண்டிய அம்சமாகும்.

ஹஜ் கமிட்டியின் கவனத்திற்கு.

சென்ற முறை ஹஜ்ஜின் போது ஒரு சில முகவர்கள் கூடுதலான பணத்தைப் பெற்றுக் கொண்டு, bedget விமானங்களில் ஹாஜிகளை அழைத்துச் சென்றமை குறிப்பிடத்தக்கது. இது விடயத்தில் இம்முறை ஹஜ் கமிட்டி மிகவும் கவனமாக செயல்பட வேண்டும் என சில முகவர்கள் தெரிவித்தனர்.

இவர்கள் இம்முறை என்ன திருட்டு வழியில் குருட்டுப் பயணம் செய்கின்றார்கள் என்று என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

திட்டம் போட்டு திருடும் கூட்டம் திருடிக்கொண்டே இருக்கும். சட்டம் போட்டு தடுக்கும் கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்கும். திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது. இதுவே உண்மை.

பேருவளை ஹில்மி 

 


Post a Comment

0 Comments