இதுபோலத்தான் நீங்கள் இறைவணக்கத்தில் இருக்கும்போது உங்களுக்கு ஆழ்ந்த மௌனத்தில் தன்னிலே மூழ்கி இருக்க வேண்டும்.
அப்போதுதான் உங்கள் உடல் உறுப்புகள் மறைந்து வெற்றிடமாக மாறும்.
இந்நிலையில் இருக்கும்போது மனம் அமைதி அடைந்து. மனம் ஆழ்ந்த மௌனத்தில் தன்னிலே மூழ்கி மனம் இல்லாமல் போகும். உங்கள் ஆன்மாவை உணர்ந்து ஆன்மாவில் இறை உணர்வை உங்களால் உணர முடியும்.
ஆழ்ந்த மௌனத்தில் தன்னிலே மூழ்கி இருந்ததால்தான் புல்லாங்குழலால் காற்றை சுவாசித்து இசையே உணர்ந்து வெளிப்படுத்தியது.
இறைவணக்கம், இறை தேடல், இறை காதல், இறைவனிடம் சரணாகதி அனைத்தும் வெளியில் இல்லை.
நீங்கள் உங்களுக்குள் ஆழ்ந்த மௌனத்தில் தன்னிலே மூழ்கி இருந்ததால் மட்டுமே உணர முடியும்.
وَلَقَدْ خَلَقْنَا الْاِنْسَانَ وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهٖ نَفْسُهٗ وَنَحْنُ اَقْرَبُ اِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيْدِ
நிச்சயமாக நாம்தான் மனிதனை (முதன் முதலாகவும்) படைத்தோம். அவன் மனதில் உதிக்கும் எண்ணத்தையும் நாம் அறிவோம். பிடரியிலுள்ள இரத்த நரம்பைவிட நாம் அவனுக்கு மிக சமீபமாகவே இருக்கின்றோம்.
(அல்குர்ஆன் : 50:16)
0 Comments