
பாஜகவின் மூத்த தலைவர் எச். ராஜா கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவரது உடல்நிலை குறித்து அறிந்த தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நேரில் சென்று எச். ராஜாவின் உடல்நலம் குறித்து விசாரித்தார்.
முதலமைச்சருடன் திமுக நாடாளுமன்ற முக்கிய திமுக நிர்வாகிகள் உடன் சென்றிருந்தனர். மருத்துவமனையில் எச். ராஜாவிற்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்து அங்கிருந்த மருத்துவர்களிடம் கேட்டறிந்த முதலமைச்சர், அவர் விரைவில் குணமடைய தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் திடீர் உடல்நல பாதிப்பு ஏற்பட்ட போதிலும், தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அரசியல் ரீதியாக மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும், மனிதநேய அடிப்படையில் முதலமைச்சர் நேரில் சென்று நலம் விசாரித்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
webdunia

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com






0 Comments