Ticker

6/recent/ticker-posts

Ad Code



யானைகள் மீது மோதித் தடம் புரண்ட ரயில்


இலங்கையில் ரயில் ஒன்று யானைகள் மீது மோதித் தடம் புரண்டுள்ளது.

பயணிகள் இருந்த அந்த ரயிலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆனால் 6 யானைகள் கொல்லப்பட்டன.

ஹபரானா (Habarana) நகரில் உள்ள வனவிலங்குக் காப்பகத்திற்கு அருகே ரயில் சென்றுகொண்டிருந்தது.

தலைநகர் கொழும்புக்கு 180 கிலோமீட்டர் தூரத்தில் ஹபரானா நகரம் அமைந்துள்ளது.

ரயில் தடத்தைக் கடந்து சென்ற யானைகள் மீது ரயில் மோதியது.

விபத்தில் தப்பிய 2 யானைகளுக்குச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இலங்கையில் யானைகளைத் துன்புறுத்துவதோ கொல்வதோ சட்டப்படி குற்றமாகக் கருதப்படுகிறது.

இலங்கையில் சுமார் 7,000 யானைகள் இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.

அங்கு பின்பற்றப்படும் பௌத கலாசாரத்தில் யானைகளுக்கு முக்கிய பங்கு உள்ளது.

யானைகள் தேசிய பொக்கிஷமாகப் பார்க்கப்படுகின்றன.

யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஏற்படும் குறுக்கீடு காரணமாக ஏற்படும் மரணங்கள் குறித்து இலங்கை கவலைப்படுகிறது.

2023இல் யானை-மனித மோதல்களில் 450 யானைகளோடு 150 பேர் மாண்டனர்.

nambikkai

 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments