Ticker

6/recent/ticker-posts

Ad Code



இலங்கை சிங்கள மக்களின் தாய்மொழிதின சிறப்புக்கட்டுரை!


சிங்கள மொழியின் சிறப்பு!

(இன்று தாய்மொழி தினமாகும். அதனையொட்டி சிங்கள மொழி சம்பந்தமான விபரங்களை திரட்டித் தருவதில் 'வேட்டை' பெருமிதம் கொள்கின்றது.)

உலகில் சுமார் 7000 மொழிகள் உள்ளன. இவற்றுள், 109 மொழிகளுக்கு மட்டுமே கூகுள் மொழிபெயர்ப்புச் சேவைகளை வழங்குகிறது. அதில் சிங்களமும் ஒன்றாகும்.

உலகிலுள்ள ஒரு சிறிய நாட்டில் ஒரு சிறிய குழுவினரால் மட்டுமே பேசப்படும் அற்புதமான ஒரு மொழி சிங்களமாகும். குறிப்பிட்ட மொழிகளைத்  தாய்மொழியாகப் பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கையின் தரவரிசைப்படி சிங்களம் 68வது இடத்தில்  உள்ளது,

சீனம், அறபு, ஹீப்ரு, தமிழ், சமஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன் போன்ற உலகின் பழமையான மொழிகளுள் சிங்களமும் ஒன்றாகக் கொள்ளப்படுகின்றது. 

வயதான.மொழியாக இருப்பது மட்டுமல்லாது,  இது ஓர் உயிருள்ள மொழியுமாகும்.  இன்று வரை தன் இருப்பை நிலைநாட்டி வெற்றி பெற்ற மொழி; உலகின் பழமையான மொழிகள் சில இன்று முற்றாக அழிந்துவிட்டாலும், சிங்கள மொழிக்கு அந்த கதி ஏற்படவில்லை. 

2300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இம்மொழியில் உரைநடை எழுத முடிந்தது. 1500 ஆண்டுகளுக்கு முன்பே  முன்னோர்கள் இம்மொழியில் கவிதைகள் எழுதியுள்ளனர் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.  மொழியின் சிறந்த உணர்வாகக் கருதப்படும் கவிதைகள், மிகவும் மேம்பட்ட மொழியில் மட்டுமே எழுதப்படும். தற்போது கிடைத்துள்ள பழமையான சிங்களக் கவிதைகளான "சிகிரி குருடு கீ"யின் வயதைக் கருத்தில் கொண்டால், அவை 1300 ஆண்டுகளுக்கும் மேலானவை. தெற்காசியாவில்  உன்னதமான இலக்கிய படைப்புகளை உருவாக்கிய ஒரே மொழி சமஸ்கிருதம் மட்டுமாக இருந்தபோதிலும், அனுராதபுர காலத்திலிருந்து வளர்ந்த உரைநடை இலக்கியம் சிங்கள மொழியில்தான உள்ளது,

சிங்கள மொழியின் சிறப்பு அம்சமாக நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் தனித்துவமான வளர்ந்த எழுத்துக்களின் தொகுப்பாகக் கருதப்படுகின்றது.

ஆங்கிலம் உட்பட உலகின் பல முன்னணி மொழிகளுக்கு சொந்த எழுத்துக்கள் இல்லை.  ஆங்கிலம், பிரஞ்சு, ஸ்பானிஷ், இத்தாலியன், ஜெர்மன், நார்வே, ஆஸ்திரியா போன்ற ஐரோப்பாவில் உள்ள சுமார் 150 சக்திவாய்ந்த மொழிகள் லத்தீன் எழுத்துக்களைத்தான் தங்கள் எழுத்துக்களாகப் பயன்படுத்துகின்றன. ஆனால் லத்தீன் இப்போது வழக்கிழந்துள்ளது.

எழுத்துக் குறியீடுகள் மூலம் பலதரப்பட்ட ஒலிகளைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் திறன் சிங்கள மொழிக்குண்டு.  ஆனால் ஆங்கிலம் உட்பட பல மொழிகளில் எழுத்துகளுக்கும் ஒலிகளுக்கும் இடையே தெளிவான, தர்க்கரீதியான தொடர்பு இல்லை.  எனவே, உலகில் அதிக ஒலிப்பு மொழியாக சிங்களம் உள்ளது. 

காலனித்துவத்தின் விளைவுகள் மற்றும் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் உலகின் சில பழங்கால மொழிகள் தற்போது முற்றிலும் மறைந்துவிட்டன.  துருக்கியம், பிலிப்பைன்ஸில் உள்ள தகாலொக், வியட்நாமிலிருந்த சுனோம் மற்றும் இந்தியாவிலிருந்த முண்டா போன்ற  மொழிகள் இப்போது தங்கள் எழுத்துக்களுக்குப் பதிலாக லத்தீன் எழுத்துக்களைப் பயன்படுத்துகின்றன.

ஆனால் பல  அச்சுறுத்தல்களுக்கு மத்தியில், சிங்கள மொழி இன்றும் கூட நிலை பெற்றிருப்பதைக் காணமுடிகின்றது.

சிங்கள மொழியின் வெளிப்பாட்டு ஆற்றல் மிகவும் உயர்ந்தது.  பல நூற்றாண்டுகளுக்கு முன் இயற்றப்பட்ட சதர்மரதனாவளி, ஜாதக நூல், குட்டில காவியம் போன்ற படைப்புகளைப் பார்த்தாலே இதனைப் புரிந்து கொள்ளலாம். 

உலகின் ஒரு சிறிய தீவில், சிங்களம் ஒரு ஆதரவற்ற அனாதை மொழி என்று நினைப்பவர்கள் தங்கள் மொழியியல் பாரம்பரியம் மற்றும் உலகின் பிற மொழிகள் பற்றிய இந்த உண்மைகளை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்!

செம்மைத்துளியான்

 

Email;vettai007@yahoo.com

Post a Comment

0 Comments