
விண்வெளிக்கு மனிதர்கள் மட்டுமே சென்று வந்துள்ளதாக நம்மில் பலர் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால் ஆமை, தவளை, குரங்கு என 10-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் ஆராய்ச்சி நோக்கங்களுக்காக விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டன. அது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
1947 ஆம் ஆண்டு அமெரிக்கா பழ ஈக்களை விண்வெளிக்கு கொண்டு சென்றது. கதிர்வீச்சால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய இந்த பல ஈக்கள் விண்வெளியில் பயன்படுத்தப்பட்டன. முதல் முறையாக விண்வெளிக்குச் சென்ற மனிதன் அல்லாத உயிரினமாக இந்த பழ ஈ வரலாறு படைத்தது.
அதனைத் தொடர்ந்து 1948 ஆம் ஆண்டு குரங்குகள் விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டன. இந்த குரங்கு உயிரிழந்த நிலையில் அடுத்ததாக 1949 ஆம் ஆண்டு இன்னொரு குரங்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த குரங்கு அதிர்ஷ்டவசமாக ஆராய்ச்சிகளை முடித்துக் கொண்டு பூமி திரும்பியது. 1951 மற்றும் 1957 ஆண்டுகளில் ரஷ்யாவால் நாய்கள் விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டன. இருப்பினும் அவை அங்கு உயிரிழந்தன.
1950 ஆம் ஆண்டு எலிகள் விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டன. உயிரியல் நிகழ்வுகள், புவியீர்ப்பு விசையால் உயிரினங்கள் எப்படி பாதிக்கிறது என்பது குறித்து ஆய்வு செய்ய எலிகள் விண்வெளிக்கு சென்றன. கினி பன்றிகள் 1961 ஆம் ஆண்டு ரஷ்ய அரசால் கினி பன்றிகள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன. பாலூட்டிகள் விண்வெளி நிலைமையில் எப்படி செயலாற்றுகின்றன என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
ரஷ்யாவால் 1959 ஆம் ஆண்டு முயல்கள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டு இருதயம் மற்றும் சுவாச செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. புவியீர்ப்பு விசையில் உயிரினங்கள் செயல்படும் விதம் குறித்து ஆய்வு செய்ய நாசாவால் 1970 ஆம் ஆண்டு தவளைகள் விண்வெளிக்கு அனுப்பப்பட்டன.
1968 ஆம் ஆண்டு ரஷ்யா இரண்டு ஆமைகளை சந்திரனை சுற்றி கொண்டு சென்றது. இந்த இரண்டு ஆமைகளும் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பின. நீர் வாழ் உயிரினங்கள் விண்வெளி சூழலில் எப்படி வாழ்கின்றன என்பது குறித்து ஆய்வு செய்ய 1973 ஆம் ஆண்டு மீன்கள் விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டது.
1963 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஃபிலைட் என்ற பூனை விண்வெளிக்கு கொண்டு செல்லப்பட்டு நரம்பு மண்டலம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இவ்வாறு மனிதர்களைப் போன்று தொடர்ந்து பல்வேறு உயிரினங்களும் விண்வெளிக்கு ஆராய்ச்சி நோக்கங்களுக்காக கொண்டு செல்லப்படுகின்றன.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments