
ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 13ஆம் தேதி ஜெய்ப்பூர் நகரில் 28வது போட்டி நடைபெற்றது. மதியம் 3.30 மணிக்கு துவங்கிய அந்தப் போட்டியில் டாஸ் வென்ற முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு மிகவும் தடுமாற்றமாக விளையாடிய கேப்டன் சஞ்சு சாம்சன் 15 (19) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார்.
இருப்பினும் மறுபுறம் அவருடன் சேர்ந்து விளையாடிய ஜெய்ஸ்வால் அரை சதத்தை அடித்தார். அவருடன் எதிர்புறம் கைகோர்க்க முயற்சித்த ரியான் பராக் 30 (22) ரன்னில் விக்கெட்டை இழந்தார். இந்தப் பக்கம் தொடர்ந்து நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 75 ரன்கள் குவித்து முக்கிய நேரத்தில் விக்கெட்டை விட்டார்.
இறுதியில் ஹெட்மயர் 9 ரன்னில் அவுட்டானாலும் துருவ் ஜுரேல் அதிரடியான 35* (23), நிதிஷ் ராணா 4* (1) ரன்கள் எடுத்து கை கொடுத்தார்கள். அதனால் 20 ஓவரில் ராஜஸ்தான் 173/4 ரன்கள் எடுத்த நிலையில் பெங்களூருவுக்கு ஹேசல்வுட், குர்னால் பாண்டியா, யாஷ் தயாள், புவனேஸ்வர் குமார் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். அடுத்ததாக விளையாடிய பெங்களூரு அணிக்கு ஆரம்பத்திலேயே பில் சால்ட் அடித்து நொறுக்கினார்.
அவருடன் சேர்ந்து விராட் கோலி நங்கூரமாக விளையாடி 92 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல துவக்கத்தைக் கொடுத்தார். அந்த வகையில் சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியில் பில் சால்ட் 5 பவுண்டரி 6 சிக்ஸருடன் 65 (33) ரன்களில் குமார் கார்த்திக்கேயா சுழலில் அவுட்டானார். அவருடன் இணைந்து விளையாடிய விராட் கோலி தமது பங்கிற்கு அரை சதத்தை அடித்து 62* (45) ரன்கள் குவித்து அசத்தினார்.
இறுதியில் மிடில் ஆர்டரில் தமது பங்கிற்கு நேர்த்தியாக விளையாடிய தேவ்தூத் படிக்கல் 40* (28) ரன்கள் எடுத்ததால் 17.3 ஓவரிலேயே 175/1 ரன்களை எடுத்த பெங்களூரு எளிதாக ராஜஸ்தானை 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதனால் பெங்களூரு தங்களுடைய 4வது வெற்றியை பெற்று அசத்திய ராஜஸ்தான் 4வது தோல்வியை சந்தித்தது. இந்தப் போட்டியில் விராட் கோலி தனது டி20 கேரியரில் 100வது அரை சதத்தை அடித்தார்.
அதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் 100 அரை சதங்கள் அடித்த முதல் இந்திய மற்றும் ஆசிய வீரர் என்ற 2 வரலாற்று சாதனைகாலை விராட் கோலி படைத்துள்ளார். அவரைத் தவிர்த்து இந்தியா மற்றும் ஆசிய நாடுகளைச் சேர்ந்த எந்த வீரரும் 100 டி20 அரை சதங்கள் அடித்ததில்லை. அத்துடன் ஐபிஎல் தொடரில் அதிக முறை 50க்கும் மேற்பட்ட ரன்கள் குவித்த வீரர் என்ற டேவிட் வார்னர் சாதனையையும் கிங் கோலி (இருவரும் தலா 66) சமன் செய்துள்ளார்.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com

0 Comments