Ticker

6/recent/ticker-posts

வள்ளுவரிடம் கேட்டதும் கிடைத்ததும்-90


455. வினா : தெய்வமே வலியவந்து உதவும் யாருக்கு? 
விடை : சமுதாயம் உயர உழைப்பவர்க்கு

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும். மடிதற்றுத் தான்முந் துறும்.(1023)

456. வினா : சூழாமல் தானே முடிவெய்தும் எது?
விடை : தன் குடி உயர அயராது உழைப்பவர் செயல் 

சூழாமல் தானே முடிவெய்தும் தம்குடியைத் தாழாது உஞற்று பவர்க்கு.(1024)

457. வினா : தலை சிறந்த தொழில் எது? 
விடை : உழவுத் தொழில்

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை.(1031)

458. வினா : உலகம் என்னும் தேருக்கு அச்சாணி போன்றோர்
விடை: உழவர்கள்

உழுவார் உலகத்தார்க்கு ஆணிஅஃ தாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து.(1032)

459. வினா : விளை நிலத்திற்கு எரு வேண்டாம் எப்போது? 
விடை: மண் பதப்படுத்தி உழுத நிலத்திற்குர

தொடிப்புழுதி கஃசா உணக்கின் பிடித்தெருவும் வேண்டாது சாலப் படும்.(1037)

(தொடரும்)

Email;vettai007@yahoo.com




Post a Comment

0 Comments