
அவன் ஒரு குறைமாத குழந்தையாகப் பிறந்தான்
என் மனைவியின் பிரசவத்தின் போது நான் வேலையில் இருந்தேன்.
என் மனைவியை பரிசோதித்த மருத்துவர், அவசரம் என்று உடனே என்னை மருத்துவமனைக்கு வரச் சொன்னார்.
நான் அங்கு சென்றபோது, குழந்தை பிறந்திருந்தது. குறைமாத குழந்தையைப் பார்த்த என் மனைவி, இது தன் குழந்தை இல்லை என்று கூறி அழுதுவிட்டு குழந்தையை மருத்துவமனையில் அப்படியே விட்டு விட்டுச் சென்றிருந்தாள். 
குழந்தை இருந்த சூழ்நிலையில், குழந்தையின் பக்கத்தில் அவள் மிக முக்கியம் இருக்க வேண்டும் என்பதை தெரிந்தும், குழந்தையை விட்டுச்சென்றுள்ளாள்.
டாக்டர் என்னிடம் கேட்டார், 
இப்போது என்ன செய்யலாம் என்று… ஒரு நொடி கூட தாமதிக்காமல் குழந்தையை நான் வளர்க்கப்போகிறேன் என்று சொன்னேன்..
என்னிடம் எனக்கென்று ஒரே ஒரு சொத்தாக ஒரு சிறிய ஸ்டோர் ரூம் இருந்தது. இரவும் பகலும் குழந்தையைப் பார்த்துக்கொள்ள, அந்தக் ஸ்டோர் ரூமை முழுவதுமாக விற்றுவிட்டேன்.
எனது சேமிப்பையும், என்னிடம் இருந்த பணத்தையும் எனது குறைமாத குழந்தையைப் பார்த்துக்கொள்வதற்காகவே செலவு செய்தேன்.
நான் அவனுக்காக என் இதயம், என் பொறுமை, என் அன்பு மற்றும் என்னை சார்ந்த அனைத்தையும் அர்ப்பணிக்க முடிவு செய்தேன்.
வைத்தியர்களை தவிர வேறு யாருடைய உதவியும் இல்லாமல் அவனைக் கவனித்து வளர்த்து வந்தேன். குழந்தையை பராமரிக்கும் ஒரு பணிப்பெண்ணைக்கூட நான் தேடவில்லை.
இப்போது என் குட்டிப் பையனுக்கு ஒரு வயது. அவன் இவ்வளவு அழகாக வளரும் வரை, வேலைக்குச் செல்லாமல் என் சேமிப்பை முழுவதுமாக அவனுக்காக செலவழித்தேன்.
அவனும் நன்றாகவும் அழகாகவும் வளர்ந்தான்.
கைவிட்ட குழந்தையின் தாய், குழந்தையை வளர்த்திருப்பதைப் பார்த்து குழந்தையிடம் மீண்டும் வர விரும்பினாள்.
அவள் என்னிடம் மன்னிப்பு கேட்க வந்தாள். குழந்தை எவ்வளவோ மாறியிருப்பதைப் பார்த்து கதறி அழுதாள்.
நான் அவளை புரிந்துகொள்கிறேன். அவள் குழந்தைக்கு தவறு செய்தாள், அவள் செய்த தவறை நான் செய்ய விரும்பவில்லை. ஒரு குழந்தைக்கு தாய் தேவை. அதனால், அவளுடைய தவறை நான் மன்னித்தேன்.
இதில் இன்னொரு விடயம் என்னவென்றால், 
என் மனைவி என் குழந்தையை தேடி வந்த நாள் இரவு என்னிடம் சேமிப்பில் இருந்த கடைசி சதமும் தீர்ந்துவிட்டது. மறுநாள் காலையின் சாப்பிடுவதற்கும் கையில் பணம் இருக்கவில்லை.
ஆனால், அன்று இரவு எனது மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. நான் விண்ணப்பித்த ஒரு வேலை எனக்கு கிடைத்திருந்தது. ஒப்பந்த அடைப்படையில் அந்த வேலை எனக்கு கிடைத்து.
நான் என்ன சொல்கிறேன் என்றல், ஒரு போதும் உங்கள் குழந்தைகளை கைவிடாதீர்கள். இறைவன் அப்படித்தான் நல்லவர்களை சோதிப்பான், ஆனால் கைவிடமாட்டான்.”
தேவிகா 
சிங்கப்பூர் 

கட்டுரைகள் |  Ai SONGS |

Email;vettai007@yahoo.com


0 Comments