Ticker

6/recent/ticker-posts

Ad Code


 

உடலில் உள்ள கொழுப்பை கடகடவென குறைக்க வேண்டுமா? இந்த ஒரே ஒரு கஞ்சி போதும்


உடம்பில் தங்கியிருக்கும் கொழுப்புகளை எளிதில் கரைக்கக்கூடிய பானம் ஒன்றினை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

உடலில் உள்ள கொழுப்புகளை கரைப்பதற்கு கொள்ளு முக்கியமாக உதவி செய்கின்றது. உடலில் தேங்கியுள்ள கொழுப்பைக் கரைப்பதுடன், ஏராளமான சத்துக்களும் உள்ளது.

கொள்ளு கஞ்சியை வாரம் இரண்டுமுறை குடித்து வந்தால், சிறுநீரக கற்கள், சர்க்கரை நோய், எடை இழப்பு, ஹீமோகுளோபின் அளவு அதிகரிப்பதுடன், முடி மற்றும் சருமத்தின் ஆரோக்கியம் மேம்படவும் செய்கின்றது.

தேவையான பொருட்கள்: 

கொள்ளு - 1/4 கப்

வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

அவல் - 2 டேபிள் ஸ்பூன்

தண்ணீர் - 4 1/2 டம்ளர் + 1 டம்ளர் * தயிர் - 1 கப்

உப்பு - 1 டீஸ்பூன்

வறுத்த சீரகப் பொடி - 1 டீஸ்பூன் 

செய்முறை: 

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கொள்ளு சேர்த்து நன்கு பொன்னிறமாக வறுக்கவும். இதனுடன் வெந்தயத்தையும் சேர்த்து வறுத்து ஆற வைக்கவும்.

பின்பு வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் அவலை சேர்த்து வறுக்கவும். பின்பு வறுத்த அனைத்து பொருட்களையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பான அரைத்துக் கொள்ளவும்.

பின்பு குக்கரை அடுப்பில் வைத்து நான்கரை டம்ளர் தண்ணீர் ஊற்றி, கொள்ளு கஞ்சி பொடியை சேர்த்து கட்டி இல்லாமல் கலந்துவிட்டு, குக்கரை மூடி 3 அல்லது 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.

விசில் போன பின்பு குக்கரை திறந்து ஆற வைக்கவும். தொடர்ந்து ஒரு கப் தயிரை பாத்திரம் ஒன்றில் ஊற்றி, அதனுடன் ஒரு டம்ளர் தண்ணீரை, சிறிது உப்பு சேர்த்து மோராக அடித்துக் கொள்ளவும்.

பின் அடித்து வைத்துள்ள மோரை கஞ்சியுடன் சேர்த்து கலந்து, மேலே 1 டீஸ்பூன் வறுத்த சீரகப் பொடியை தூவி கிளறினால், சுவையான கொள்ளு கஞ்சி தயார். 

இவை உடல் வெப்பத்தை அதிகரிக்கும் என்பதால் வாரத்தில் 2 முறைக்கு மேல் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். 

manithan

Email;vettai007@yahoo.com

 

Post a Comment

0 Comments