Ticker

6/recent/ticker-posts

மின்விசிறியில் தொங்கிய நிலையில் மாணவியின் சடலம் மீட்பு


பிங்கிரியவில் உள்ள வடமேற்கு தேசிய கல்வியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மாணவி ஒருவரின் சடலம் மின்விசிறியில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டதாக பிங்கிரிய பொலிஸார் தெரிவித்தனர்.

தெல்தெனிய, வெலிகட்டிய, புதுஹாபுவ பகுதியைச் சேர்ந்த ராஜபக்ஷ உடஹெனேகெதர சஞ்சீவனி குமாரி என்ற 24 வயது இளம் பெண் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி,, வடமேற்கு தேசிய கல்வியியல் கல்லூரியில் படித்து வந்ததாகவும், சம்பந்தப்பட்ட படிப்புகளுக்காக வடிவமைக்கப்பட்ட நடைமுறை கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக சிலாபத்தில் உள்ள ஆனந்த தேசிய பாடசாலைக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அவளுடைய புடவை  கழுத்தில் சுற்றப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

tamilmirror

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments