Ticker

6/recent/ticker-posts

Ad Code



முட்டை - ஆரோக்கியமா இல்லையா?


"கொழுப்பு அதிகமாக உள்ளது.. முட்டை சாப்பிடலாமா?" - இந்தக் கேள்வி பலருக்கும் இருக்கும்..

முட்டைகளில் அதிகக் கொழுப்புச்சத்து இருந்தாலும் அது தீங்கிழைக்காது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஒரு முட்டையில் 207 மில்லிகிராம் கொழுப்புச்சத்து உள்ளது.

Sausage போன்ற பதப்படுத்தப்பட்ட உணவில் இருப்பதைவிட அது அதிகம்.

ஆனால் முட்டையின் கொழுப்புச்சத்து இதய நோய், பக்கவாதம் ஆகியவற்றின் அபாயத்தை அதிகரிக்காது.

காரணம்?

உணவுமுறை கொழுப்பிற்கும் (dietary cholesterol) ரத்தக் கொழுப்பிற்கும் (blood cholesterol) வித்தியாசங்கள் உள்ளன.

ரத்தக் கொழுப்பு - இதயக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்தக்கூடும்

உணவுமுறை கொழுப்பில் சில, ரத்தக் கொழுப்புடன் சேரும்.

ஆனால் அதிகமான கொழுப்பு ஒருவரின் சொந்தக் கல்லீரலிலிருந்து வருவதாக மருத்துவர்கள் கூறினர்.

அதற்கு அதிகமான முட்டைகளைச் சாப்பிடலாம் என்று அர்த்தமில்லை.

அளவோடு சாப்பிடுவது முக்கியம்.

நாளொன்றுக்கு ஒன்று அல்லது ஒருநாள் விட்டு ஒருநாள் 2 முட்டைகள் சாப்பிடலாம் என்று மருத்துவர்கள் ஆலோசனை கூறினர்.

seithi

Email;vettai007@yahoo.com

 

Post a Comment

0 Comments