Ticker

6/recent/ticker-posts

Ad Code



உலக பணக்கார பட்டியலில் உபி-யை சேர்ந்த நபர்! அதிர்ச்சியில் உறைந்த எலான் மஸ்க்!


உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸ் பகுதியில் வசித்து வரும் அஜீத் என்ற நபர் தனது அன்றாட தேவைகளுக்காக சிறிது பணத்தை எடுக்க தனது ஊரில் உள்ள ஒரு வங்கிக்கு சென்றுள்ளார். முதலில் ரூ. 1,800, பிறகு அதனை தொடர்ந்து ரூ. 1,400 எடுத்துள்ளார். இந்த வழக்கமான செயல் ஒரு அசாதாரண நிகழ்வாக மாறும் என்பது அவருக்குத் அப்போது தெரியவில்லை. திடீரென்று, அன்று அவர் தனது வங்கிக் கணக்கை ஆன்லைனில் சரிபார்த்தபோது, ​​அஜித்தின் கண்கள் நம்ப முடியாமல் விரிந்தன. அவரது கணக்கில் எண்ண முடியாத அளவில் பணம் இருந்துள்ளது.

அஜித்தின் வங்கி கணக்கில் ரூ. 1,00,13,56,00,00,01,39,54,21,00,23,56,00,00,01,39,542 என்ற கற்பனை செய்த முடியாத அளவில் பணம் இருந்துள்ளது. இது உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க்கின் நிகர மதிப்பை விட அதிகமாக இருந்தது. எலான் மஸ்கின் சொத்து மதிப்பு தோராயமாக ரூ. 3,07,00,00,00,00,000 ஆகும். ஆனால் அதில் இருந்தே பல மடங்கு அதிகமாக இவரது வங்கி கணக்கில் இருந்துள்ளது. இதனை கண்டு உற்சாகமாக இருப்பதா அல்லது பயப்படுவதா என்று தெரியாமல் அஜித் திகைத்துப் போய் உள்ளார். இந்த பணத்தை செலவழிக்கலாமா அல்லது புகார் கொடுக்கலாமா என்ற யோசனையில் இருந்துள்ளார்.

ஆரம்பத்தில், அஜித்தின் குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருந்துள்ளனர். இந்த பணம் அவர்களின் வாழ்க்கையை எப்படி எல்லாம் மாற்றும் என்று யோசித்துள்ளனர். ஒரு புதிய வீட்டைக் கட்டுவது, தங்கள் குழந்தைகளின் கல்விக்கு பணம் செலுத்துவது மற்றும் அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவது போன்ற நம்பிக்கைகளுடன் அவர்கள் கஷ்டங்கள் இல்லாத எதிர்காலத்தை கற்பனை செய்தனர். இருப்பினும், அவர்களின் மகிழ்ச்சி சிறிது நேரத்தில் பயத்தால் காணாமல் போனது. இது ஒரு வேலை தவறான பணம் அல்லது மோசடியாக இருந்தால் என்ன செய்வது? என்ற யோசிக்க தொடங்கினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அஜித் உடனடியாக தனது வங்கியை தொடர்பு கொண்டு நிலைமையை தெளிவுபடுத்தினார். வங்கியின் தரப்பில் ஆரம்பத்தியில் புரியாமல் இருந்த நிலையில் உடனடியாக அவரது வங்கி கணக்கை முடக்கினர். மற்றொரு வங்கியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இப்படி நடந்துள்ளது என்று வங்கி தரப்பில் தெளிவுபடுத்தி உள்ளனர். பிறகு சைபர் கிரைம் போலீசார் தலையிட்டு விசாரணை செய்து வருகின்றனர். திடீரென்று அஜித்தின் கணக்கில் தோன்றிய இவ்வளவு பணம் அவரை திக்கு முக்காட வைத்துள்ளது.

zeenews

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments