
இருக்கையிலே மீண்டும் கதவு தட்டப்பட்டது எழுந்து சென்றாள் .மீனா கதவருகே நிற்பது மருத்துவர் என அறிந்ததும் ராஜகுமாரியிடம் திரும்பி "அரசே மருத்துவர் மீண்டும் வந்து விட்டார்" என்றாள் உடனே "சரி உள்ளே அனுப்புங்கள்"என்றாள் ராஜகுமாரி.
வரும் போதே "வணக்கம் அரசே" எனக் கூறிக் கொண்டே வந்தான் குமரன்.
ராஜகுமாரி "வணக்கம் வாருங்கள் மருத்துவரே" என்றவள் தாங்கள் "தான் புதிய மருத்துவரா ?சிறு வயதினராய்க் காட்சி தருகின்றீர்களே நான் கூட முதியவராய் இருப்பீர்களோ என நினைத்துக்கொண்டேன் மன்னிக்க மருத்துவப் பெருந் தகையே" என்றாள்.
உடனே "ஐயோ அரசே எதற்கும் இந்தனை பெரும் வார்த்தை மன்னிப்பு எல்லாம்" எனக் கேள்வியோடு அமர்ந்தான் குமரன்.
"சரி மருத்துவரே தங்களின் வருகையின் நோக்கம் என்ன?.என் மன்னருக்கு என்னாச்சு ?தற்போது நலமாக உள்ளாரா? என்னை அழைத்து வரச் சொன்னாரா? வாருங்கள் போவோம்."
"ஆமா ஏன் என் மன்னர் மயங்கினார் கூறுங்கள் மருத்துவரே" என்றாள் ராஜகுமாரி .
மீனா பானு இருவரும் மருத்துவரின் முகத்தையே பார்த்தவாறு இருந்தார்கள் என்ன?சொல்லப் போகிறார் மருத்துவர் என்னும் அவாவோடு குமரன் சிறு புன்னகையோடு கூறினான்." நான் சொல்வதைக் கேட்கும் முன் தாங்கள் இந்தப் பானத்தைப் பருகிடுங்கள். அதன் பின் கூறுகிறேன் தங்களுக்கான பதிலை" எனக் கூறி பானுவிடம் ஒரு கிண்ணத்தையும் பானி போல் மருந்தையும் நீட்டி "இதை ராஜகுமாரியின் கரங்களிலே கொடுங்கள்" என்றான்.
"சரி" எனக் கூறி மீனா அதை வாங்கிக் கொண்டாள். அப்போது ராஜகுமாரி மறுத்தார்."இவை இப்போ எதற்காக எனக்குக் கொடுத்திட வேணும்.என் கணவருக்கு வைத்தியம் பண்ண வந்து எனக்கு ஏதேதோ கொடுக்கின்றீர்களே மருத்துவரே. ஒன்றுமே தெளிவு பெறவில்லையே எனக்கு. ஆகையால் நான் இதை அருந்திட மாட்டேன் என் அன்னையை அல்லது தந்தையை அழைத்து வாருங்கள்.அதன் பின் அருந்துவது பற்றி சிந்திக்கலாம்" என்றார்.
(தொடரும்)

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments