Ticker

6/recent/ticker-posts

Ad Code



தோல்விகளை கலைந்து வெற்றிப்படியில் ஏறுவது எப்படி? இதோ சிம்பிள் டிப்ஸ்!


வெற்றி என்பது ஒரு கவர்ச்சியான உணர்வாகும். ஆனால் அதை நோக்கிய பயணம் ஆபத்துக்களால் நிறைந்தது. பலர் தங்கள் முயற்சிகளின் முழு பலன்களை முடியாமல் பாதியிலேயே தடுமாறுகிறார்கள். இந்தத் தடைகளைப் புரிந்துகொள்வது, அவற்றைத் தவிர்ப்பதற்கும், வெற்றிக்கான பாதையில் முன்னேறுவதற்கும் முக்கியமானது. அப்படி ஒருவர் வாழ்க்கையில் தோல்விகள் ஏற்படுவதற்கான காரணங்களையும் அதை எப்படி கலைய வேண்டும் என்பதையும் இங்கு பார்ப்போம். 

திட்டத்தை செயல்படுத்தாமல் இருப்பது:

எண்ணங்களும் கனவுகளும் பல சமயங்களில் வெறும் எண்ணங்களாகவே முடிந்து விடுகின்றன. தங்களது கனவுகளை பலர் செயல்படுத்த விரும்புவதில்லை. பெரிய அளவிலான திட்டங்களின் பயமுறுத்தும் வகையில் இருப்பதால் அது தனிநபர்களை செயல்பட விடாமல் தடுக்கலாம்.  சிந்தனையிலிருந்து செயலுக்கு முக்கியமான படியை எடுக்கத் தயங்குவதற்கும், இது காரணமாக அமைகிறது. திட்டங்களைத் தொடங்குவதற்கு தைரியம், உறுதிப்பாடு மற்றும் கடினமான உழைப்பு அகியவை அவசியம். தோல்வி என்பது, முயற்சிக்கு கிடைக்காத பலன் அல்ல, முயற்சியே செய்யாமல் இருப்பதுதான் என்பதை அனைவரும் புரிந்து கொள்ளுதல் வேண்டும்.

சீரான முயற்சியுடன் இல்லாமல் இருப்பது:

பயனுள்ள எதிலும் வெற்றி பெறுவதற்கு நிலையான முயற்சி தேவைப்படுகிறது. பலருக்கு கனவை அடைய ஆரம்பத்தில் இருக்கும் அந்த உந்துதல் குறையும் போது தோல்வி ஏற்படலாம்.  நிலைத்தன்மை என்பது மீண்டும் மீண்டும் செய்யும் செயல்களைப் பற்றியது அல்ல; இது கனவை நோக்கி உங்களை ஓட வைக்கும் ஒழுக்கமான செயலாக அறியப்படுகிறது. எந்த புயல் வந்தாலும் அதை எதிர்கொள்வதற்கான உறுதியும் விடாமுயற்சியும் மனதில் கொள்ள வேண்டும். அப்படி இருந்தால்தான் வெற்றி உங்களை தேடி வரும்.

பயம் ஒரு பலமான எதிரி என்பதை அனைவரும் மனதில் கொள்ள வேண்டும். இந்த தோல்வி பயம்தான் பெரும்பாலும் வெற்றிக்கான வாய்ப்பை கிடைக்க விடாமல் செய்கிறது. தோல்வி பயம் தனிநபரை வாட்டி வதைக்கிறது, அவர்களின் முயற்சிகளை முடக்கி கட்டிப்போட்டு விடுகிறது. தோல்வியை ஒரு முற்றுப்புள்ளியாக பார்க்காமல், உங்களது கனவை நோக்கி ஓட வைக்கும் சக்தியாக பார்க்க வேண்டும். பயத்தைப் போக்க, வெற்றி பயணத்தின் ஒரு அங்கமாக தோல்வியைத் தழுவி, அது தரும் படிப்பினைகளை மதிப்பிட்டு, அவற்றைப் பயன்படுத்தி முன்னேற வேண்டும்.

தெளிற்ற தொலைநோக்கு பார்வை:

தெளிவான பார்வை இல்லாத வாழ்க்கை திசைகாட்டி இல்லாமல் பயணம் செய்வது போன்றதாகும். உங்கள் வாழ்க்கை குறித்து உங்களுக்கு இருக்கும் பார்வை இலக்குகளை அமைப்பது மட்டுமல்ல, உங்களுக்குள் இருக்கும் பல திறமைகளையும் வெளிகொனர உதவும். உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு தேர்விற்கு படிக்க வேண்டும் என்றால், எந்தெந்த நாளுக்கு எதை படிக்க வேண்டும் என்று ப்ளூ ப்ரிண்ட் போடுவது போல, வாழ்வில் வெற்றி அடையவும் தெளிவான ப்ளூ ப்ரிண்ட் வேண்டும். அப்படி இருந்தால் நீங்கள் வாழ்வில் பல கட்டங்களை எளிதாக தாண்டி விடலாம். 

தங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் இருப்பது:

தன்னம்பிக்கை வெற்றிக்கான முதல் படியாக செயல்படுகிறது. ஆயினும்கூட, பலர் சுய சந்தேகத்துடன் தங்களது கனவுகளை எட்ட தங்கள் மீது சந்தேகத்தை வைத்துக்கொண்டே போராடுகிறார்கள். அப்படி தன்னம்பிக்கை இல்லாதவர்கள் தங்கள் திறனைக் கட்டுப்படுத்துகிறார்கள். சுய-நம்பிக்கையை வளர்ப்பது என்பது ஒருவரின் பலத்தை அங்கீகரிப்பது, புரிதலை வளர்ப்பது மற்றும் நேர்மறையான சுய-பிம்பத்தை வளர்ப்பதாகும். இது குறைபாடுகளையும் தோல்விகளையும் படிக்கற்களாக ஏற்றுக்கொள்வதற்கும் வழிவகை செய்யும். 

வேலைகளை தள்ளிப்போடுவது:

தள்ளிப்போடுதல் என்ற பலருக்கு தவிர்க்க முடியாததாக உள்ளது. இது ஒரு வித மயக்கத்தை தரும் மந்தநிலை ஆகும். இதை தவிர்க்க தனி நபர்கள் அவர்களுக்குள்ளாகவே ஒழுக்கத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும். இதை செய்ய, ஒவ்வொரு முறை ‘பிறகு பார்த்துக்கொள்ளலாம்’ என உங்களுக்குள் ஒரு குரல் எழுகிறதோ, அதை அப்படியே சைலண்ட் ஆக்கி விட்டு அந்த வேலையை போய் செய்ய வேண்டும்.

zeenews


 



Post a Comment

0 Comments