Ticker

6/recent/ticker-posts

Ad Code



தனது சிறுநீரால் தினமும் கண்களை கழுவும் பெண்; நெட்டிசன்கள் க்ஷாக்!


இந்தியாவின் புனேவைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது கண்களை சிறுநீரால் கழுவும் காணொளி வெளியிட்டிருந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் பலரும் விசனங்களை வெளியுட்டுள்ளனர்.

புனேவைச் சேர்ந்தவர் நூபுர் பிட்டி என்பவரே தனது இன்ஸ்டாவில் , தான் தினமும் காலையில் தனது சிறுநீரில் கண்களை கழுவுவதாக தெரிவித்துள்ளார்.

அதோடு, அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், ‘Urine Eye Wash — Nature’s Own Medicine’ என்ற தலைப்பில் காணொளியையும் வெளியிட்டுள்ளார்.

அதாவது, தினந்தோறும் காலை நேரத்தில் எனது சிறுநீரில் கண்களை கழுவுவதால் கண்ணில் ஏற்படும் வறட்சி, எரிச்சல் மற்றும் சிவத்தல் உள்ளிட்ட பிரச்சினையில் இருந்து நிவாரணம் கிடைக்கிறது என்றும் இது இயற்கை மற்றும் மாற்று சிகிச்சைமுறை மீதான தனது நம்பிக்கை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கண் பராமரிப்புக்கு சிறுநீர் பாதுகாப்பானது அல்ல. இது போன்ற செயல் கண் எரிச்சல், தொற்று மற்றும் பார்வை இழப்பு உள்ளிட்ட தீங்குகளை ஏற்படுத்தும் என்றும், இந்த மாதிரி முட்டாள் தனமாக செயப்ல்படாதீர்கள் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.      

jvpnews

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments