Ticker

6/recent/ticker-posts

Ad Code



பிறந்த குழந்தைகளுக்கு பிஸ்கட் கொடுக்ககூடாதா..? மருத்துவர் தரும் அறிவுரை..


கு
ழந்தைகளுக்கு உணவு கொடுப்பது என்றாலே கொஞ்சம் கவனத்துடனே கொடுக்க வேண்டும். அதுதான் அவர்களுடய வளர்ச்சியையும், உடல் ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கிறது. 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உணவு அவசியம். ஏனெனில் எந்த தொற்றாக இருந்தாலும் குழந்தைகளைதான் எளிதில் தாக்கும். அப்படி பல வைரஸ் பரவலில் குழந்தைகள்தான் முதன்மையானவர்களாக இருந்துள்ளனர். இதை மருத்துவ ஆராய்ச்சியாளர்களே கூறியுள்ளனர். குழந்தையில் அவர்களுக்கு என்ன ஊட்டச்சத்து கொடுக்கிறோமோ அதுதான் அவர்களுடைய ஆரோக்கியத்தில் வளர்ந்தபின்பும் பெரும் பங்காற்றுகிறது. குழந்தைகளுக்கு ஊட்டசத்து என்கிற பெயரில் தினிப்பதும் ஆபத்துதான். அது அவர்களுக்கு எதிர்மறையான விளைவை உண்டாக்கலாம்.

எது கொடுத்தாலும் குழந்தைக்கு அது ஒத்துக்கொள்ளுமா.. உடல் ஏற்றுக்கொள்கிறதா என்பதை அறிந்து கொடுக்க வேண்டும். சில நேரங்களில் குழந்தை கொஞ்சம் அழுதாலே கையில் பிஸ்கெட் கொடுத்துவிடுவார்கள். அதை குழந்தை கொஞ்சமாக சாப்பிடும். சில தாய்மார்கள் பாலில் கரைத்து இடைப்பட்ட  உணவுக்கு ஊட்டி விடுவார்கள்.

அப்படி, குழந்தைகளுக்கு கொடுக்கும் இந்த பஸ்கெட்டுகள் ஆரோக்கியத்தில் எந்த அளவிற்கு பாதிப்பை உண்டாக்குகின்றன என்பதை தனது இன்ஸ்டாவில் குறிப்பிட்டிருக்கிறார் குழந்தைகள் நல மருத்துவர் ரெய்னா ப்ரர்.

அந்த பதிவில் அவர் "குழந்தைகளுக்கு நீங்கள் கொடுக்கும் பிஸ்கெட் உண்மையில் ஊட்டச்சத்து என நினைத்துக்கொண்டிருந்தால் நிச்சயம் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள் என்கிறார். தன்னை தேடி வரும் பெற்றோர்கள் குழந்தைக்கு காய்ச்சல், உடல்நிலையில் பிரச்சனை எனில் முதலில் அவர்களுடைய உணவு முறையைதான் கேட்டறிவேன். ஏனெனில் அதுதான் அவர்களுடையா ஆரோக்கியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். அவ்வாறு கேட்கப்படும்போது பலரும் பிஸ்கெட் கொடுப்பதாக கூறுகின்றனர். இது எனக்கு பெரும் ஷாக்கிங்காகவும், வருத்தமாகவும் இருக்கிறது" என்று கூறியுள்ளார்.

ஏனெனில் "பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பிஸ்கெட்டுகளில் ஊட்டச்சத்து என்பதே கிடையாது. அது மைதா, அதிக சர்க்கரை , அதிக எண்ணெய் மற்றும் கலோரிகளை கொண்டது. அது குழந்தைகளுக்கு தேவையற்ற கலோரியை லோட் செய்வது போன்றது. இதனால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்காமல் போகிறது. அது நீண்ட நேரத்திற்கு பசியை கட்டுப்படுத்தும் என்பதால் அவர்கள் மற்ற உணவுகளையும் சாப்பிட மாட்டார்கள். எனவே பிஸ்கெட்டை தவிர்த்து, காய்கறிகள், பழங்களை வைத்து விதவிதமாக அவர்களுக்கு செய்துகொடுங்கள். ஒருவேளை நீங்கள் பிஸ்கெட்தான் கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் வீட்டிலேயே கோதுமை, நட்ஸ் , ராகி கொண்டு பிஸ்கெட் செய்து கொடுங்கள். இதெல்லாம் பாக்கெட் பிஸ்கெட்டுகளிலும் கிடைத்தால் அதை வாங்கி கொடுத்து மீண்டும் அதே தவறை செய்யாதீர்கள். அந்த பொருள் அதில் 100% இருக்காது. எனவே உங்கள் கைப்பட வீட்டிலேயே செய்துக்கொடுங்கள்" என்று அறிவுறுத்துகிறார் குழந்தைகள் நல மருத்துவர் ரெய்னா.

news18

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments