Ticker

6/recent/ticker-posts

ஒரே பெண்ணை திருமணம் செய்த 2 சகோதரர்கள்.. இப்படியும் கலாச்சாரம் இருக்கா?


பழங்கால பலதார பாரம்பரியத்தை ஏற்றுக்கொண்டு இரண்டு சகோதரர்கள் ஒரே பெண்ணை திருமணம் செய்து கொண்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

“பலதார மணம்” கலாச்சாரம்

புராண கதைகளில் ஒரே பெண்ணை சகோதரர்கள் திருமணம் செய்தார்கள் என படித்திருப்போம். ஆனால் தற்போது இருப்பவர்கள் இப்படியான கலாச்சாரங்களை விரும்புவதில்லை.

அப்படி இருக்கும் பட்சத்தில் பலதார மணம் முறைப்படி நடந்த திருமணம் தற்போது பேசும் பொருளாக மாறியுள்ளது.

அந்த வகையில் ஹிமாச்சலப் பிரதேசத்தில் பழங்கால ஹேட்டி பாலியண்ட்ரி பாரம்பரியத்தை ஏற்றுக்கொண்டு இரண்டு சகோதரர்கள் திருமணம் செய்துள்ளனர்.

ஹிமாச்சலப் பிரதேசத்தின் டிரான்ஸ்-கிரி பகுதியில் நடந்த இந்த திருமணம் தார மணம் கலாச்சாரம்படி நடந்துள்ளது. அந்த கலாச்சாரங்களை பின்பற்றும் கிராமத்தை சேர்ந்த பிரதீப் நேகி மற்றும் கபில் நேகி ஆகியோர் குன்ஹாட் கிராமத்தைச் சேர்ந்த சுனிதா சவுகான் என்ற பெண்ணை திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

முழு பரஸ்பர சம்மதம் மற்றும் சமூக பங்கேற்புடன் இந்த திருமணத்தை நடத்த திட்டம் போட்டுள்ளனர். மூத்த சகோதரரான பிரதீப், ஜல் சக்தி துறையில் பணிபுரிகிறார், அதே நேரத்தில் கபில் விருந்தோம்பல் துறையில் வெளிநாட்டில் பணிபுரிகிறார். இவர்கள் இருவரும் சுனிதா உடனான திருமணத்தில் ஒவ்வொரு சடங்கிலும் பற்கேற்றனர்.

மணமகன் பிரதீப் இதுகுறித்து பேசிய போது “இது எங்கள் கூட்டு முடிவாகவும் நம்பிக்கையாகவும் உள்ளது. கவனிப்பு மற்றும் பகிரப்பட்ட பொறுப்பு பற்றிய விஷயங்களை கருத்தில் கொண்டு, எங்கள் மரபுகளை பற்றி நாங்கள் பெருமைப்படுகிறோம். மேலும், நாங்கள் திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் வசிக்கலாம். ஆனால் எங்களுடைய மனைவிக்கு ஐக்கிய குடும்பமாக ஆதரவு, ஸ்திரத்தன்மை மற்றும் அன்பு தேவை. அதனை நாங்களும் உறுதிச் செய்கிறோம்...” என பேசியிருக்கிறார்.

மணமகள் சுனிதா, “இது எனது விருப்பம். இருவரை திருமணம் செய்ய வேண்டும் என யாரும் சொல்லவில்லை. இது எங்களுடைய பாரம்பரியம்..” என பேசியிருக்கிறார்.

3 நாட்கள் நடந்த இந்த திருமணக் கொண்டாட்டத்தில், கிராமத்தை சுற்றி உள்ள பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராமவாசிகள் மற்றும் உறவினர்கள் கலந்து கொண்டுள்ளனர்.      

manithan


Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments