Ticker

6/recent/ticker-posts

Ad Code



கிழக்கு மாகாணத்தின் இருண்ட பக்கம்: காவல்துறையின் அதிர்ச்சி தகவல்


கிழக்கு மாகாணத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தொடர்பான துஷ்பிரயோக வழக்குகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது.

இதன்படி, கிழக்கில் 2024 ஆம் ஆண்டில் 304 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் வருண ஜெயசுந்தர தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஒரு சம்பவம் நடந்த பின்னரே சுமார் 90% சிறுவர்கள் பாதுகாப்பற்றவர்களாக இருப்பது கண்டறியப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பதிவு செய்யப்படாத முறைப்பாடு 

அம்பாறை மாவட்டத்தில், மொத்தம் 101 சிறுவர்கள் தவறான முறைக்கு உட்படுத்தப்படுத்தப்பட்ட சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, பெரும்பாலான சம்பவங்கள் காவல்துறையிடம் முறைப்பாடு செய்யப்படுவதில்லை என்று குறிப்பிட்ட அவர், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைககளை பாதுகாப்பதில் அதிக பொறுப்பை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ibctamil

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments