
ஊழல் ஆட்கொண்ட உலகில், இப்பயங்கரமான ஊழல் தொற்று நோயால் பாதிக்கப்படாத நேர்மையான அரசியல் வாதிகளும், நேர்மையான அதிகாரிகளும் விரல் விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் இருக்கவே செய்கின்றனர். அந்த வகையில் முன்னை நாள் மேலதிக அரச கணக்காய்வாளர் திரு A G லலித் அம்பன்வலவும் ஒருவர்.
அறிவை படித்த தான் அடுத்தவனிடம் கை நீட்டக் கூடாது என்ற கொள்கையுடன் வாழும், வாழ்ந்தவர்களில் லலித் அம்பன்வலவும் ஒருவர். அரசியல் அழுத்தங்களுக்கு அஞ்சாமல், பணத்திற்கும் வரப்பிரசாதங்களுக்கும் விலை போகாத ஒரு நேர்மையான அதிகாரி.
முன்னாள் Audi superintendent னும் Additional Auditor general-மான அம்பன்வல அவர்கள்.இந்த நாட்டில் புகழ்பெற்ற பொது அதிகாரியாக பலரால் மிகவும் மதிக்கப்படும் ஒரு அதிகாரியுமாவார்.
சிறை சென்ற அரசியல் சிம்ம சொற்பணங்களின், மற்றும் உயர் அதிகாரிகளின் சிறை வாசத்தின் திரைக்குப் பின்னால் மறைந்து நிற்கும் நேர்மையான தைரியமான வீரம்மிக்க ஒரு அரச அதிகாரி A G லலித் அம்பன்வில.
1986 பெப்ரவரி 5 ஆம் திகதி அரச கணக்கு கண்காணிப்பாளராக தனது அரச பணிகளைத் தொடங்கினார் லலித் அம்பன்வல.
லலித் அம்பன்வல மத்திய மாகாணத்துகான அரச கணக்காய்வு திணைக்கள அதிகாரியாக (Superintendent of Audit) பணியாற்றினார்.
2000 ஆம் ஆண்டு கண்டியின் சில அரசியல் வாதிகள் கல்விப் பணிப்பாளர் ஒன்றினைந்து பெருமளவிலான அரசாங்கப் பணத்தை மோசடி செய்யும் மோசடியில் ஈடுபட்டிருந்தனர்.
அம்பன்வலவிடம் இந்த மோசடி சிக்கிக்கவே கடும் நடவடிக்கையில் இறங்கினார் அம்பன்வல.
இந்தைத் தொடர்ந்து 2002 ஆம் ஆண்டு இந்த விடயத்தில் உழல் அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாளும் அம்பன்வல கோடிகளுக்கு விலை பேசப்படுகிறார்.
அம்பன்வல அதை மறுக்கவே அவருக்கு கொலை மிரட்டல்கள் உயிர் அச்சுறுத்தல்கள் வருகின்றன.
ஒரு முறை சதி மூலமான கார் விபத்து ஒன்றை ஏற்படுத்தியும் அவர் அதில் இருந்து உயிர் தப்பினார்.
இறுதியாக, கண்டியில் தன் காரியாலயத்தில் இருந்து வீடுவரும்போது மே மாதம் 02 ஆம் திகதி 2010 ஆம்ஆண்டு அஸ்கிரிய போலீஸ் மைதானத்திற்கு அருகில் அதிகாரி அம்பன்வலயின் முகத்தில் எசிட் வீசப்படுகிறது.
அப்போது அவரது சிறிய மகள் பக்கத்தில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது.

இதன் போது தனது ஒரு கண்ணை இழந்தார் அம்பன்வல.
தன் கண்ணை இழந்த நிலையிலும் கூட ஒன்றைக் கண்னுடன் தாய் நாட்டில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் மற்றும், தாய் நாடு பாதுகாக்கப்பட வேண்டும் என்ற தியாக சிந்தனையுடன் மஹிந்தானந்த சிறை சென்ற வழக்கிற்கு அத்தனை சாட்சியங்களையும் தேடிச் சென்று அயராது உழைத்து உதவி அளித்தவர் லலித் அம்பன்வல. இன்று மஹிந்தானந்தவின் சிறைத்தண்டனைக்கு முதல் காரண கர்தாவாக அம்பன்வில விளங்கினார்.
இவர் எசிட் தாக்குதலுக்கு உள்ளான வழக்கு 2012 முடிவுக்கு வந்து ஏழு குற்றவாளிகளுக்கு முறையே 10 வருடங்கள் 20 வருடங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு மூன்றாவது குற்றவாளியாகக் காணப்பட்டவர் 20 வருடம் சிறையுடன் அம்பன்வெல அவர்களுக்கு 50 லட்சங்கள் நட்ட ஈடு வழங்கும் படி கூறி தீர்ப்பு வழங்கப்பட்டது.
இந்த தாக்குதலுக்கு பின்னணியில் சிறை சென்ற அரசியல்வாதிகள் இருந்தார்கள் என்ற செய்தியும் அப்போது காற்றுடன் கலந்து காதுகளில் விழுந்தது.
தனது அரச சேவையில் 30 ஆண்டுகளுக்கும் மேலான சேவைக்குப் பிறகு 2017 நவம்பர் 3 ஆம் தேதி மேலதிக கணக்காய்வுத் தலைவராக ஓய்வு பெற்றார்.
மீண்டும் தனது அரச சேவையில் மேலதிக சேவையாளராக இனைந்த அம்பன்வெல அவர்கள் நேர்மையாக நாடுக்கான தனது பணியை தொடர்ந்தார்.
எசிட் தாக்குதலின் போது தனது ஒரு கண்ணை இழந்த லலித் அம்பன்வல அவர்கள், துணிவையும் தைரியத்தையும் இழக்கவில்லை. ஊழல் வாதிகளை விட்டிப் பிடிப்பதில் வல்லுநராக சேவையைத் தொடர்ந்தார்.
மீண்டும் audit superintendent ஆக பணியைத் தொடர்ந்த அம்பன்வில அவர்கள் தனது ஒரு கண்ணை இழந்த நிலையில் நாட்டுக்காக சேவையாற்றினார்.
அரச அச்சக கூட்டுத்தாபனத்திலிருந்து ரூ. 60 மில்லியன் மோசடி, மத்திய கலாச்சார நிதிய வழக்கு ரூ. 50 மில்லியன் மோசடி, வட மத்திய மாகாணத்தில் 700 மில்லியன் உர மோசடி, விவசாய அமைச்சில் 580 மில்லியன் மேசடி என பல மோசடிகளை கண்டுபிடித்து எந்த அழுத்தங்களுக்கும் அடிபணியாது தைரியத்துடன் செயல்பட்டார்.
இவை அத்தனையும் அவர் தன் ஒன்றைக் கண்ணுடன் செய்த காரியங்களே.

மகிந்தானந்த சிறை கதாபாத்திரத்தின் திரைக்குப் பின்னால் மறைந்து நிற்கும் கதாநாயகனாக காணப்படும் நேர்மையான அரச அதிகாரி லலித் அம்பன்வெல.ஒரு நேர்மையான அரச அதிகாரி. எசிட்தாக்கதலுக்கு இலக்கான போது அவர் ஊடகங்களுக்கு கூறியது,
"நான் ஒரு கண்ணால் வேலை செய்கிறேன். ஆனால் எனக்கு ஆறு கண்கள் உள்ளன என்ற எண்ணத்துடன் வேலை செய்கிறேன். கயவர்கள் என் கண்ணைப் பறித்தாலும் அவர்களால் என் உயிரைப் பறிக்க முடியவில்ல" அவர் தன் சேவைத் தொடர்ந்தார்.
அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாது, அல்லது சலுகைகளைப் பெறாமல் தனது கடமைகளை நேர்மையாகச் செய்தார். இந்த நாட்டில் நடந்த ஏராளமான ஊழல்கள் மற்றும் மோசடிகளை அம்பலப்படுத்திய ஒரு பொது அதிகாரியாக லலித் அம்பன்வல இலங்கையின் படித்த வர்கத்தால் நன்கு அறியப்பட்ட நபராவார்.
அரசாங்க நிதியை துஷ்பிரயோகம் செய்ததாகவும், கெரம் போர்ட்டுகள் விநியோகித்ததாகவும் முன்னாள் அமைச்சர்கள் மஹிந்தானந்த அளுத்கமகே, மற்றும் நலின் பெர்னாண்டோ ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதற்கு லலித் அம்பன்வல அது தொடர்பான சட்ட நடவடிக்கைகளுக்காக தனது ஒரு கண்ணால் அயராது உழைத்தவர்.
மகிந்தானந்த போன்ற பெரும் திருடர்கள் மற்றும் பலர் சிறை சென்றதிலும், இன்னும் பலர் சிறைக்குச் செல்ல வரிசைகட்டி நிற்பதிலும் அம்பன்வலவின் சேவை அளப்பரியது.
சிறை செல்ல வரிசையில் நிற்கும் பல ஊழல் அரசியல் வாதிகளின் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கு, திரைக்குப் பின் இருப்பவர் திரு A G lalith ambanwila அவர்களே.
மிகுந்த நேர்மையுடனும் , அலாதியான துணிச்சலுடனும் மகிந்தானந்தவிற்கு எதிரான கெரம் போர்ட் வழக்கைக் கொண்டு செல்லத் துணை போனவர்தான் அசிட் வீச்சுக்கு இலக்காகி தன் ஒரு கண்ணையும் தனது அழகு வதனத்தை இழந்தவர்தான் லலித் அம்பன்விலதான்.
மகிந்தானந்தவிற்கு எதிராக அப்போதைய JVP உறுப்பினரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான வசந்த சமரசிங்க 2015ம் ஆண்டு FCID யில் மஹிந்தானந்தவுக்கு எதிராகத் தொடுத்த வழக்கில் பார்வை பறிபோன கண்ணுடன் , வசந்த சமரசிங்கவிற்கு அத்தனை ஆவனங்களையும் பெற்றுக் கொடுத்து உதவினார்.
மஹிந்தானந்த அப்போதே சிறைக்குச் செல்ல வேண்டியவர். அப்போது பிரதமராய் இருந்த ரணில் விக்ரமசிங்க , சட்டமா அதிபர் திணைக்களத்தைப் பயன்படுத்தி இத்தகைய அத்தனை வழக்குகளையும் மூடிமறைத்து டீல் போட்டார்.
பெரும் அரசியல் செல்வாக்குடன் செயல் பட்ட மாகாபெரும் திருடன் மஹிந்தானந்தவினை சிறைக்கு அனுப்புவது நினைத்துப் பாராக்க முடியாத ஒரு கணவாகவே காணப்பட்டது.
எனறோ ஒரு நாள் நீதி வெல்லும் என்றும், நீதி சாவதில்லை சட்டம் தன் கடமையைச் செய்யும் என்றும் துளி நம்பிக்கையாவது ஏற்பட லலித் அம்பன்வில போன்ற அதிகாரிகள் தான் காரணம்.
முகத்திற்கு வீசப்பட்ட அசிட் வீச்சால் பார்வையை இழந்து எலுபெல்லாம் உருகிப் போனாலும் நேர்மையான அரச சேவையில் இருந்து கடைசியில் உயிரழந்த லலித் அம்பன்விலவிற்கு இன்று நீதி நிலை நாட்டப்பட்டிருக்கின்றது.
லலித் அம்பன்வல அவர்கள் 2021 ஆம் ஆண்டு மே மாதம் 14 ஆம் திகதி கண்டியில் உள்ள தனது இல்லத்தில் காலமானார். இவர் இறக்கும் இறுதியாக போது இறுதியாக மேலதிக ஒடிட்டர் ( Additional Auditor General ) ஆக பதவி வகித்தார்.
ஒரு நேர்மையான அரச அதிகாரிக்கு செய்த அநியாயங்களுக்கான நீதி....
காலம் கடந்த நிலையிலும் கிடைத்தது.
காலஞ்சென்ற அதிகாரி அம்பன்வல அவர்களுக்கு கோடி நன்றிகள். சமர்ப்பணம் .
Salute sir,
பேருவளை ஹில்மி

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments