Ticker

6/recent/ticker-posts

தன்னம்பிக்கையை வளர்க்கும் டாக்டர். அப்துல் கலாமின் பொன்மொழிகள்!!!


1.நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்!

2.கனவு காணுங்கள்! ஆனால் கனவு என்பது நீ தூக்கத்தில் காண்பது அல்ல.. உன்னை தூங்க விடாமல் செய்வதே (இலட்சிய) கனவு

3.இந்த‌ உலகத்தில் பிறந்த‌ அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த‌ பக்கத்தை இந்த‌ உலகையே படிக்க‌ வைப்பது உங்கள் கைகளில் தான் உள்ளது.

4.வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் இல்லாமல் இருப்பதுதான்,
வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.

5.நம் தவறுகளில் இருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடமே, உயர்வான வாழ்க்கைக்கு நம்மை இட்டுச் செல்லும்.

6.நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதுமே மண்டியிடுவது இல்லை.

7.ஒரு முறை வந்தால் அது கனவு.இரு முறை வந்தால் அது ஆசை,பல முறை வந்தால் அது லட்சியம்.

8 துன்பங்களை சந்திக்கத் தெரிந்தவனுக்கு தோல்வியே இல்லை.

9.ஒரு மனுஷன் பிரியும்போது அவன் தாய் அழுதா அவன் ஒரு நல்ல மகன், அவன் பிள்ளை அழுதா அவன் ஒரு நல்ல தகப்பன்,  அவன் பிரிவுக்காக ஒரு நாடே அழுதா அவன் ஒரு நல்ல தலைவன்.

10.அழகைப் பற்றிக் கனவு காணாதீர்கள், அது உங்கள் கடமையை பாழாக்கி விடும். கடமையைப் பற்றிக் கனவு காணுங்கள், அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்.

11.வாய்ப்புக்காக காத்திருக்காதே; வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்!

12.கஷ்டம் வரும்போது கண்ணை மூடாதே அது உன்னைக் கொன்றுவிடும். கண்ணைத் திறந்து பார் நீ அதை வென்றுவிடலாம்.

13.கடின உழைப்பு, நேர்மைக்கு மாற்று எதுவும் இல்லை. நிச்சயம் எதுவும் இல்லை.

14.நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை, நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால் அது உன் கைவந்து சேரும்.

15.உலகம் உன்னை அறிவதற்கு முன் உன்னை உலகுக்கு அறிமுகம் செய்துகொள்.

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்



 



Post a Comment

0 Comments