Ticker

6/recent/ticker-posts

Ad Code



நலம் வாழ -மருத்துவப் பகுதி -20

அன்பார்ந்த வேட்டை வாசகர்களே!
முன் சென்ற வாரங்களில் நாம் ஒவ்வொரு தொடரிலும் உடல்நலம் தொடர்பான பல தகவல்களை நாம் கண்டு வருகின்றோம்.
 இந்த வாரத் தொடரில் உணவின் செயல்பாடுகளைப் பற்றி நாம் பார்ப்போம் .உடல் எவ்வாறு இயங்குகிறது ?ஒவ்வொரு உறுப்புகளின் பணி என்ன ?இவ்வாறு நாம் உடலின் செயல்பாடுகளை பல தொடரில் பார்த்தோம் .உணவின் செயல்பாடுகள் என்ன என்பதைப் பற்றி இத்தொடரில் நாம் பார்க்கலாம்.

நாம் உயிர் வாழ இன்றியமையாத உணவின் பயன்பாடுகளை அறிந்தால் அதன் அருமையை நாம் உணர்ந்து கொள்வோம். பயன்படும் உணவினை பயன்படுத்துவதில் கவனமாக இருப்போம்.

உடலை உருவாக்கி வளத்தையும் வனப்பையும் வழங்குவது
உணவு குழந்தையாக பிறக்கின்றவன் வளர்ந்து மனிதனாகின்றான்.
தாய்ப்பாலாக தொடங்குகின்ற உணவு பல்வேறு வகைகளாக பெறுகின்றது. பசி போக்கி சுவைசேர்க்கும் உணவு உடலை வளர்க்கிறது .இது உணவு செய்யும் மிகச்சிறந்த கட்டுமான பணி ஆகும்.

உடம்பு செயல்பட வேண்டிய சக்தியை உணவு தருகிறது. நமது உடல் ஒரு நுட்பமான எந்திரம் போல் செயல்படுகிறது என்பது நமக்கு தெரியும் .நமது வெளி உறுப்புகளின் செயல்பாடுகளும் தெரியும். நமது பல்வேறு பணிகளை செய்ய சக்தி  தேவை இந்த இயக்க சக்தியை நாம் உண்ணும்தான்  உணவு வழங்குகிறது.

சரி என்னதான் பணி நடக்கிறது சொல்லுங்கள் கேட்பது புரிகிறது.........
நாம் விழித்திருக்கும் பொழுதும் தூங்கும் பொழுதும் நமது உள் உறுப்புகள் தொடர்ந்து செயல்படுகின்றன, அவை செயல்படுவதால் தான் நாம் உயிர் வாழ்கிறோம், நமது ரத்த ஓட்டம் செம்மையாக நடைபெற இருதயம் இயங்கிக் கொண்டே இருக்கிறது நாம் பிராணவாயுவை உட்கொண்டு அதாவது ஆக்சிஜனை சுவாசித்து கார்பன் டை ஆக்சைடை  அதாவது  கரியமில வாயுவை வெளியிட சுவாச பைகள் செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றது,

உண்ட உணவை வயிறும் குடல்களும் செரிக்க செய்கின்றன. செரித்த உணவின் சாரம் நமது உடம்பின் எல்லா பகுதிகளுக்கும் செல்ல வேண்டும் நமது உடம்பின் கழிவுகள் வெளியே பொருட்களை வெளியேற்ற குடலும், சிறுநீரகங்களும் பணி செய்கிறது மூளை எண்ணத்தின் மூலமாகி உடம்பினை இயக்குகிறது, இத்தகையாக உறுப்புகளின் பணிகள் முறையாக நடைபெற வேண்டிய சக்தி!!!!! உணவின் மூலம் தான் கிடைக்கிறது. உடலின் செயல் திறன் மேம்பாட்டிற்கு உணவு உறுதுணையாகிறது.

உணவில் நோய் தீர்க்கும் மருந்தின் மூலக்கூறுகள் உள்ளன, இயற்கை மருத்துவமே உணவின் அடிப்படையில் தான் அமைந்திருக்கிறது.

இயற்கை மருத்துவ அறிஞரான ஆச்சார்யா கே லட்சுமண சர்மா உணவினை அதனுடைய நலம் தரும் ஆற்றலின் அடிப்படையில் உடன்பாட்டு உணவு எனவும் எதிர்மறை உணவு என்றும் பகுக்கிறார்.

அது என்ன எண்ணங்களில் தான் பாசிட்டிவ் நெகட்டிவ் என்று கேள்விப்பட்டிருக்கிறோம்!!!!!

உணவிலும் பிரிவுகள் உள்ளன எந்த உணவுப் பொருட்கள் உடல் நலனை கட்டி காக்க வளர்க்க மிகவும் உறுதுணையாக இருக்குமோ அவற்றை உடன்பாட்டு உணவு (பாசிட்டிவ் புட் ) என்று கூறலாம். சாருள்ள சக்கை உள்ள சத்தான பழங்கள், காய்கறிகள், கீரை வகைகள் ஆகியவை இத்தகைய உணவுக்கு எடுத்துக்காட்டுகள். இந்த வகையினை அடிப்படை உணவு (பிரைமரி ஃபுட்) என்று சர்மா குறிப்பிடுகிறார்.

 இவற்றிடம் ஆக்க சக்தியோடு கழிவுகளை அகற்றும் தன்மையும் இருக்கும் இவை மிகுந்த தண்ணீர் சத்துடன் எளிதாக செரிக்க கூடியவனாகவும்  இருக்கும்.

உடம்பில் கழிவுகளை சேர்த்து கெடுதல் செய்யக்கூடிய உணவு (நெகட்டிவ் புட்)  இதனை இரண்டாம் தர உணவு என்றும் கூறலாம் .இதில்செயற்கை  பால் பொருட்கள் பதப்படுத்திய உணவு மைதா, சீனி ,சர்க்கரை ,எளிதில் செரிக்க இயலாத உணவுகள் ,புட்டிகளில் அடைக்கப்பட்ட பானங்கள் ,இவற்றை மிகுதியாக உண்ணும் என்ற பொழுது செரிக்க  முடியாமல் அஜீரணம் ஏற்பட்டு பல நோய்களுக்கும் உடலில் வேண்டாத தசைகள் போட்டு எடை கூடுவதற்கும் இத்தகைய உணவு தான் காரணமாகிறது நமது உணவில் 80 சதவீதத்திற்கும் மேல் உடன்பாட்டு உணவும் அதாவது பாசிட்டிவ் உணவும் 20% குறைவாக நெகட்டிவ் உணவும் இருந்தால் அதை சமச்சீர் உணவு  என்று கருதலாம். எவையெல்லாம் முதல் தர உணவு எவையெல்லாம் இரண்டாம் தர உணவு என்பதைப் பற்றி விரிவாக பார்க்கலாம் அடுத்த தொடரில்.

இதனால் நமது உடலில் அமிலத்தன்மை அதிகரித்து காரத்தன்மை குறைந்து பல அறிய வகை நோய்கள் நமது உடலில் ஏற்படுகிறது.


மேலும் பல தகவல்களுடன் உங்களுக்காக உங்களுடன் அடுத்த வாரம்  சந்திக்க உங்களுடன் உங்களுக்காக. 


டாக்டர் பர்ஜானா பாத்திமா M.D(Acu).    



 



Post a Comment

0 Comments