Ticker

6/recent/ticker-posts

Ad Code



215 ஆண்டுகள் சிறை தண்டனை... பல மாணவர்களை சீரழித்த 'Favorite' ஆசிரியர் - ஷாக்கிங் வழக்கு!


இப்போதெல்லாம் பள்ளிக்கூடங்களிலும் குற்றங்கள் அதிகம் நடைபெறுகின்றன. குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் பள்ளிக்கூடங்களில்தான் அதிகம் நடக்கின்றன.

அருவருக்கத்தக்க வகையில், பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள், வாகன ஓட்டுனர்கள் உள்ளிட்ட மற்ற ஊழியர்கள் மாணவர்களிடம் அத்துமீறும் சம்பவங்களையும் அடிக்கடி பார்க்க முடிகிறது. அந்த வகையில் தற்போது அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடந்த ஒரு சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது

சத்தமே வெளிவராத அறை

கிம் கென்னத் வில்சன் என்பவர் 23 ஆண்டுகளாக தொடக்கப்பள்ளி ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். இவரின் அத்தனை ஆண்டு பணியில், பல மாணவர்களுக்கு இவர் மிகவும் பிடித்த ஆசிரியர் ஆவார். இவர் அந்த பள்ளிக்கூடத்தின் ஆடியோ விஷுவல் கிளப்பின் பொறுப்பாளராக நிர்வாகத்தால் நியமிக்கப்பட்டிருந்தார். இதன் மூலம் அவருக்கு பள்ளியின் ஒளிபரப்பு அறை (Broadcast Room) பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் இருந்து நீங்கள் எந்த அளவிற்கு சத்தம் போட்டு கூச்சலிட்டாலும் வெளியே கேட்காது, அந்த வகையில் அந்த அறை Sound Proof செய்யப்பட்டிருக்கிறது. இதனை பயன்படுத்தி கிம் கென்னத் வில்சன் பல கொடூரமான செயல்களை செய்துள்ளார்.

 வீட்டிலும் கொடுமை செய்த வில்சன்

கிம் கென்னத் வில்சன் அந்த அறையில் வைத்து சுமார் 6-7 வருடத்திற்கும் மேலாக பள்ளி குழந்தைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியிருக்கிறார். வில்சன் பாலியல் ரீதியாக அத்துமீறியது மட்டுமின்றி அதை வீடியோவாகவும், புகைப்படமாகவும் எடுத்து வைத்துள்ளார், பலரையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தி புகைப்படங்கள், வீடியோக்களை எடுத்து சேமித்துள்ளார். இது மட்டுமின்றி போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களும் கிடைத்துள்ளன.

குற்றம் வெளிச்சத்திற்கு வந்தது எப்படி?

அதாவது, வில்சன் பள்ளியில் மட்டுமின்றி பள்ளி மாணவர்களை தன்னுடைய வீட்டிற்கும் வரச் சொல்லி பாலியல் ரீதியான அத்துமீறிலில் ஈடுபட்டுள்ளார். அதாவது குழந்தைகளிடம் அத்துமீறி நூற்றுக்கணக்கில் புகைப்படங்களை ஆல்பம் போட்டு சேமித்திருக்கிறார். இது பள்ளிக்கோ அல்லது வேறு யாருக்கோ தெரியவே இல்லை. ஆனால் இது 2023ஆம் ஆண்டில் பெயர் ஏதும் இல்லாத புகார் ஒன்று வந்ததை அடுத்து வெளிச்சத்திற்கு வந்தது. புகார் வந்ததை தொடர்ந்து போலீசார் அவரது வீட்டைச் சோதனை செய்த பின்னரே உண்மைகள் அனைத்தும் வெளிதச்சத்திற்கு வந்தது.

ஏராளமானோர் பாதிப்பு

அவர் பல ஆண்டுகளாக குழந்தைகளை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியதற்கு சாட்சிகளாக ஆயிரக்கணக்கில் அதன் புகைப்படங்களும், வீடியோக்களும் போலீசாரிடம் சிக்கின. அந்த ஆதாரத்தை வைத்துக்கொண்டு 12 குழந்தைகள் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது தெரியவந்தது. ஆனால் உண்மையான பாதிப்பு எண்ணிக்கை இதை விட அதிகம் என்று கூறப்பபடுகிறது. வழக்கு விசாரணையின்போது பாதிக்கப்பட்ட பல குழந்தைகளும், அவர்களின் பெற்றோர்களும் முன்வந்து சாட்சி அளித்தனர்.

215 ஆண்டுகள் சிறை

அதில் வில்சனால் பாதிப்புக்கு உள்ளான பல குழந்தைகளால் அதிர்ச்சியில் இருந்து வெளிவரவே முடியவில்லை என்றும் அவர்களால் நீதிமன்றத்தில் எதையும் விளக்க முடியாது என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டிருந்தது குறிப்படித்தக்கது. வில்சன் மீது குழந்தைகளை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்தியது மற்றும் ஆபாச விஷயங்களை வைத்திருத்தல் உள்ளிட்ட 36 கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. "வாழ்வின் கடைசிக் கட்டத்தை இவர் சிறைக் கம்பிகளுக்குள் கழிப்பார்" என உத்தரவிட்டு தண்டனையை அறிவித்தார். வில்சனுக்கு 215 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. வில்சனால் சிறையில் இருந்து வெளிவரவே முடியாது.

வில்சனால் வெளியே வர முடியுமா?

இருப்பினும், அமெரிக்க சட்டத்தின் கீழ் முதியோர் பரோல் என்ற ஓட்டை இருக்கிறது. இந்த விதியின் கீழ், வயதான கைதிகள் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பிறகு பரோலுக்கு விண்ணப்பிக்கலாம். வில்சனுக்கு இப்போது வயது 65. வில்சன் இந்த விதியைப் பயன்படுத்திக் கொண்டால், அவர் 85 வயதில் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது.

zeenews

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments