
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 2025 ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய அணியானது செப்டம்பர் 10-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக துபாய் மைதானத்தில் நடைபெற்ற லீக் போட்டியில் விளையாடியது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஐக்கிய அரபு அமீரக அணியை 13.1 ஓவரில் 57 ரன்களில் சுருட்டியது.
பின்னர் 58 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி 4.3 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 60 ரன்கள் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக சுழற்பந்து வீச்சாளர்களாக அக்சர் படேல், வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் விளையாடி இருந்தனர்.
முதன்மை வேகப்பந்து வீச்சாளராக ஜஸ்ப்ரீத் பும்ரா விளையாடினார். மேலும் இரண்டாவது வேகப்பந்து வீச்சாளராக ஹார்டிக் பாண்டியாவும், கூடுதல் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக ஷிவம் துபேவும் செயல்பட்டிருந்தனர். இந்த போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தாலும் இரண்டாவது வேகப்பந்து வீச்சாளராக ஒரு முழுநேர பந்துவீச்சாளர் விளையாட வைக்க வேண்டும் என்று பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா அர்ஷ்தீப் சிங்கை இந்திய அணியின் பிளேயிங் லெவனில் கொண்டுவர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடிய அதே அணியுடன் இந்திய அணி இந்த தொடரிலும் விளையாட நினைக்கிறார்கள் என்று கருதுகிறேன்.
ஏனெனில் இரண்டாவது முழுநேர வேகப்பந்து வீச்சாளர் இல்லாமல் இந்திய அணி இந்த ஆசிய கோப்பை தொடரில் விளையாடி வருகிறது. என்னை பொறுத்தவரை டி20 கிரிக்கெட்டின் புள்ளி விவரத்தின் அடிப்படையில் பும்ராவை விட மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்றால் அது அர்ஷ்தீப் சிங் தான். டி20 போட்டிகளை பொருத்தவரை இந்திய அணிக்காக சர்வதேச போட்டியில் 99 விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் மிகச் சிறப்பான பந்துவீச்சாளர் என்று ஏற்கனவே நிரூபித்துள்ளார்.
எனவே அவரை முதன்மை வேகப்பந்து வீச்சாளராக அணிக்குள் கொண்டுவர வேண்டும் என்றும் அவரால் இன்னும் சிறப்பாக இந்திய அணியின் வெற்றிக்கு கைகொடுக்க முடியும் என்றும் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments