Ticker

6/recent/ticker-posts

வழக்கறிஞர்களுக்கு உதவும் AI


வழக்கறிஞர்கள் வேலையை மேலும் சிறந்த முறையில் செய்வதற்கு உதவ கூடுதலான செயற்கை நுண்ணறிவு அம்சங்கள் அறிமுகமாகின்றன.

சிங்கப்பூர்ச் சட்டத்துறை இணையவாசலின் ஆக அண்மைய புதுப்பிப்பு வழக்கறிஞர்கள் ஆய்வுப்பணிகளை மேற்கொள்ள கைகொடுக்கும்.

அதன்வழி அவர்கள் தங்கள் நேரத்தை மேம்பட்ட முறையில் சட்ட ஆலோசனை போன்றவற்றில் செலவிடலாம்.

சிங்கப்பூர்ச் சட்டத்துறையின் இணையத்தளம் LawNet என்று அழைக்கப்படுகிறது.

சிங்கப்பூரில் முக்கால்வாசிக்கு மேற்பட்ட வழக்கறிஞர்கள் அதனைப் பயன்படுத்துகின்றனர்.

இணையத்தளம் GPT கட்டமைப்பைப் பயன்படுத்துகிறது.

15,000க்கும் அதிகமான நீதிமன்றத் தீர்ப்புகளின் சுருக்கத்தை அது வழங்குகிறது.

அதில் தகவலைத் தேடும் வழக்கறிஞர்கள் 10 மடங்கு வேகமாக முடிவுகளைப் பெறமுடியும்.

செயற்கை நுண்ணறிவுக் கட்டமைப்பு கட்டங்கட்டமாக மேம்படுத்தப்பட்டு விரைவில் முக்கியச் சட்டப் பிரிவுகள் குறித்த ஆழமான தகவல்களை வழங்கும் ஆற்றலைப் பெறும்

seithi

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments