Ticker

6/recent/ticker-posts

நூலிழையில், ஹெலிகாப்டர் கயிறு மூலம் தப்பிய நேபாள அமைச்சர், குடும்பம்


நேபாளத்தில் ஆட்சியாளர்களின் ஊழலுக்கு எதிராக நடந்த  கலவரத்திலிருந்து தப்பி, அந்நாட்டு அமைச்சர்களும் குடும்பத்தினரும் ராணுவ ஹெலிகாப்டர்களில் தப்பிச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில், ஒரு அமைச்சர், அவரது குடும்பத்தினர், ஹெலிகாப்டரில் ஏறுவதற்குள் போராட்டக்காரர்களால் அச்சுறுத்தல் ஏற்படும் நிலையில், நூலிழையில், ஹெலிகாப்டரின் கயிறைப் பிடித்துக் கொண்டு நேபாளத்திலிருந்து தப்பிய காட்சிகள் வெளியாகியிருக்கிறது.

அவர்களைத் தாக்க ஓடி வந்த போராட்டக்காரர்கள் தரையிலிருந்து பார்த்தபடி நிற்கு ஒரு குடும்பத்தினர் கயிறைப் பிடித்தபடி ஹெலிகாப்டரில் தொங்கிக் கொண்டு செல்கிறார்கள்.

காத்மாண்டுவில் ஏற்பட்ட போராட்டத்தின் காரணமாக, நேபாள பிரதமர் சர்மா ஒலி தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு நாட்டைவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. நாட்டில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டும் பணியில் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

nambikkai

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments