Ticker

6/recent/ticker-posts

Ad Code



மில்லியன் கணக்கில் சொத்துக்களை ஈட்டிய விமல் வீரவன்ச : நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு


முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு (Wimal Weerawansa) எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை தொடர்பில் நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.

இதனடிப்படையில், குறித்த வழக்கை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 22 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்து நடத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தரவை கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று (17) பிறப்பித்துள்ளது.

பெறுமதியான சொத்து

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,  அமைச்சராக பணியாற்றிய காலப்பகுதியில் சுமார் 75 மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில் வெளிப்படுத்தத் தவறிய குற்றச்சாட்டின் கீழ் விமல் வீரவன்சவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மூலம் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

குறித்த வழக்கு இன்று (17) கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு விசாரணைக்கு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள விமல் வீரவன்ச நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்.

விமல் வீரவன்ச சார்பில் முன்னிலையாகியிருந்த சட்டத்தரணி, குறித்த வழக்கு தொடர்பிலான ஆவணங்களை ஆய்வு செய்ய கால அவகாசம் அவசியம் எனவும் அதற்கான திகதியை வழங்குமாறும் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனடிப்படையில், வழக்கு தொடர்பான சாட்சியங்களை எதிர்வரும் 22 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

மேலும், இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலையான சாட்சிகள் அன்றைய தினமும் நீதிமன்றில் முன்னலையாக வேண்டும் என நீதிபதி இதன்போது அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ibctamil

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments