Ticker

6/recent/ticker-posts

அமெரிக்க கிரிக்கெட் சபைக்கு ஐ.சி.சி இடைக்காலத் தடை


அமெரிக்க கிரிக்கெட் சபையை சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) இடைநீக்கம் செய்துள்ளது. 

உடன் அமுலாகும் வகையில் இந்த இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

நிர்வாக கட்டமைப்பில் காணப்படும் குறைபாடு காரணமாக இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. 

ஜூலை மாதம் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுக் கூட்டத்தில், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை நடத்தவும் விரிவான நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் அமெரிக்க கிரிக்கெட் சபைக்கு 3 மாதங்கள் அனுமதி வழங்கிய நிலையில் அதனை மறுசீரமைக்க தவறியமையினால் இந்த தடை அமுலுக்கு வந்துள்ளது. 

இருப்பினும் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கும் 20 ஓவர் உலகக் கிண்ணத் தொடர் மற்றும் 2028 இல் ஒலிம்பிக் போட்டிகளில் அமெரிக்க தேசிய அணி பங்கேற்பதில் சிக்கல் இருக்காது என சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

adaderanatamil

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments