Ticker

6/recent/ticker-posts

முஸ்லிம்களின் தலையை எடுப்போம்; வன்முறை தூண்டும் பேச்சு: பாஜக தலைவர் ரவி மீது வழக்கு


விநாயகர் சிலை பேரணியில் வன்முறையை தூண்டும் வகையில் பேசிய பாஜக எம்எல்சி சி.டி.ரவி மீது கர்நாடக போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

மண்டியா மாவட்டத்தில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின்போது, மசூதி மீது கல்வீசியதாக எழுந்த புகாரால் மதக்கலவரம் வெடித்தது.

இருதரப்பினருக்கும் இடையே கல்வீச்சு சம்பவங்கள் நடந்தன.

இதையடுத்து அங்கு நடைபெற்ற பேரணியில் பேசிய பாஜக மூத்த தலைவரும், எம்எல்சியுமான சி.டி.ரவி இஸ்லாமிய மக்களை குறிவைத்து, "எங்களுக்கு எதிராக தொடை தட்டாதீர்கள். நாங்கள் தொடையையும் உடைப்போம், தலையையும் எடுப்போம்' என்று பேசியிருந்தார்.

இது  பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் சி.டி. ரவி மீது வழக்கு போடப்பட்டது.

nambikkai

Email;vettai007@yahoo.com

 


 

Post a Comment

0 Comments