
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் டைலனோல் (Tylenol) எனும் வலி நிவாரண மருந்தைக் கர்ப்பிணிகள் உட்கொள்ளக்கூடாது என்று ஆலோசனை கூறியிருக்கிறார்.
அது குழந்தைகளிடம் autism எனும் தொடர்புத் திறன் குறைபாட்டை உண்டாக்குகிறது என்று அவர் காரணம் சொல்கிறார்.
டைலனோலில் இருக்கும் பாராசிடமோல் (paracetamol) கேடு விளைவிக்கும் என்றும் மோசமான காய்ச்சலுக்கு மட்டும் கர்ப்பிணிகள் டைலனோலை உட்கொள்ளவேண்டும் என்றும் திரு டிரம்ப் கூறினார்.
கர்ப்பிணிகள் டைலனோல் உட்கொண்டால் குழந்தைகள் தொடர்புத் திறன் குறைபாட்டுக்கு ஆளாகிறார்கள் என்று ஒருசில ஆய்வுகள் காட்டுகின்றன.
ஆனால் அதனை உறுதிப்படுத்த முடியவில்லை.
டைலனோல் தயாரிப்பு நிறுவனம் Kenvue மருந்தின் பயன்பாட்டை ஆதரித்துள்ளது.
அதில் இருக்கும் பாராசிடமோல் தொடர்புத் திறன் குறைபாட்டை உண்டாக்குவதில்லை என்று நிறுவனம் BBC ஊடகத்திடம்
வலியுறுத்தியது
கர்ப்பிணிகளுக்கு வலி நிவாரணம் தேவைப்பட்டால் பாராசிடமோல்தான் ஆகப் பாதுகாப்பான மருந்து என்று அது சொல்கிறது.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments