Ticker

6/recent/ticker-posts

ஒளவையாரின் நல்வழி பாடல்!-10


பாடல் - 19.

சேவித்தும் சென்றிரந்தும் தெண்ணீர்க் கடல்கடந்தும்
பாவித்தும் பாராண்டும் பாட்டிசைத்தும் – போவிப்பம்
பாழின் உடம்பை வயிற்றின் கொடுமையால
நாழி அரிசிக்கே நாம். 

விளக்கம்: 

பிறரை வணங்கியும், அவரிடம் சென்று உதவி கேட்டும், பரந்து விரிந்த கடல் கடந்து சென்றும், உறவாடியும், போலியாகப் புகழ்ந்து பாடியும், இந்த உலகில்  வாழ்வது எதற்காக? 

எல்லாம் இந்த பாழாய்ப் போன வயிற்றை நிரப்பத் தேவைப் படும், ஒரு  நாழி அரிசிக்காகத் தான்.

பாடல் - 20.

அம்மி துணையாக ஆறிழிந்த வாறொக்கும்
கொம்மை முலைபகர்வார் கொண்டாட்டம் -இம்மை
மறுமைக்கும் நன்றன்று மாநிதியம் போக்கி
வெறுமைக்கு வித்தாய் விடும்.

விளக்கம்: 

அம்மிக் கல்லை வயிற்றில் கட்டிக் கொண்டு, ஆற்றில் இறங்கினால் மூழ்கி விடுவோம். அது போலத் தான் விலை மாதர்களுடனான உறவும். இந்தப் பழக்கம், நம்முடைய இப்போதைய பிறப்பிற்கும், அடுத்து வரக் கூடிய பிறப்பிற்கும் நல்லது செய்யாது. 

இருக்கும் சொத்து முழுவதையும் அழித்து,  நம்மை ஓட்டாண்டி ஆக்கி விடும். 

(தொடரும்)

 


Post a Comment

0 Comments