Ticker

6/recent/ticker-posts

உலகில் குறைந்த செலவில் வாழக்கூடிய நாடு எது தெரியுமா? - டாப் 10 லிஸ்ட் இதோ!


இன்றைய நவீன கால யுகத்தில் யார் வேண்டுமானாலும், எந்த நாடுகளுக்கு வேண்டுமானாலும் சுற்றுலாச் செல்லலாம், கல்வி பயிலச் செல்லலாம்,  வேலைக்குச் செல்லலாம். அடிப்படையாக உங்களுக்கு நேரமும், கையில் பணமும் இருந்தால் போதுமானது.

சுற்றுலாவுக்கும், வாழ்வதற்கும் சிறந்த நாடு...

குறிப்பாக, பயணம் செல்ல விரும்புபவர்கள் வெளிநாட்டுக்குச் சுற்றுலா செல்லும்போது அந்த நாட்டில் பயணம் மேற்கொள்ள எவ்வளவு நாள்களுக்கு, எவ்வளவு செலவாகும்?, அந்த நாட்டில் விலைவாசி எந்தளவிற்கு இருக்கும் என்பதை கணக்கிடுவார்கள். இன்னும் சிலரோ எந்த நாட்டில் குறைந்த பட்ஜெட்டில் பயணிக்கலாம் என்பதை கண்டறிந்து, அந்த குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும் சுற்றுலா செல்வார்கள். 

அந்த வகையில், குறைந்த பட்ஜெட்டில் பயணிக்க தகுந்த நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது பயணிப்பதற்கு மட்டுமின்றி இந்த நாடுகளில் நீங்கள் குறைந்த செலவில் வாழலாம். இப்போது இதுபோன்ற நாடுகள்தான் நெட்டிசன்கள் மத்தியிலும், சுற்றுலா விரும்பிகள் மத்தியிலும் பிரபலமாக உள்ளன.

முதலிடத்தில் வியட்நாம்

குறைந்த செலவில் வாழக்கூடிய நாடுகளின் பட்டியலில், தொடர்ச்சியாக 5வது முறையாக வியட்நாம் முதலிடத்தை தக்கவைத்துள்ளது. ஆசிய நாடான வியட்நாம் தான் குறைந்த செலவில் வாழ்வதற்கான நாடு ஆகும். 

நடத்திய சர்வேயின்படி இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த சர்வே, 2014ஆம் ஆண்டில் இருந்து நடைபெற்று வருகிறது. சுமார் 170 நாடுகளுக்கும் மேல் நடத்தப்பட்ட இந்த சர்வேயில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்களிடம் இருந்து கருத்து கேட்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், மிக குறைந்த செலவில் வாழ்வதற்கும், சுற்றுலா மேற்கொள்வதற்குமான நாடாக வியட்நாம் விளங்குகிறது. நீங்கள் வியட்நாம் நாட்டிற்கு வந்து பணியாற்றினால் அதிகளவில் வருவாயை சேமிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

டாப் 10 நாடுகள் 

வியட்நாம் முதலிடத்தை பிடித்துள்ள நிலையில், கொலம்பியா மற்றும் பனாமா நாடுகள் முறையே 2வது, 3வது இடத்தை பிடித்துள்ளன. சீனா, தாய்லாந்து, இந்தோனேஷியா நாடுகள் முறையே 4வது, 5வது, 6வது இடத்தை பிடித்துள்ளன. பிலிப்பைன்ஸ், மெக்ஸிகோ, மலேசியா, பிரேசில் ஆகிய நாடுகள் முறையே 7வது முதல் 10வது இடத்தை பிடிக்கின்றன. வியட்நாம், தாய்லாந்து, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய ஆசிய நாடுகள் மக்களின் தனிப்பட்ட நிதி சார்ந்த பட்டியலில் முன்னணி வகிக்கின்றன.

zeenews

 


Post a Comment

0 Comments