Ticker

6/recent/ticker-posts

12 வயதுக்குட்பட்டவர்கள் போன் பயன்படுத்த விரைவில் தடை


இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட பாடசாலைக் குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதைத் தடை செய்ய திட்டமிட்டுள்ளதாக குழந்தைகள் நல அமைச்சர் சரோஜா போல்ராஜ் அறிவித்தார்.

பாடசாலை சிறார்கள் கலந்து கொண்ட விழாவில் பேசிய அமைச்சர், 12 வயதுக்குட்பட்ட எந்தப் பிள்ளையும் மொபைல் போன் வைத்திருக்கவோ அல்லது பயன்படுத்தவோ அனுமதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய அரசாங்கம் ஒரு முடிவை எடுக்கும் என்றார்.

இந்த நடவடிக்கை, குழந்தைகளை அதிகப்படியான திரை நேரத்திலிருந்தும், தீங்கு விளைவிக்கும் ஒன்லைன் உள்ளடக்கத்திற்கு ஆளாகாமல் பாதுகாப்பதையும், ஆரோக்கியமான குழந்தைப் பருவ வளர்ச்சி மற்றும் சமூக தொடர்புகளை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார். 

tamilmirror

 


Post a Comment

0 Comments