Ticker

6/recent/ticker-posts

ஏற்றுமதி வருவாய் 13 பில்லியன் டொலராக உயர்வு…


2025 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் இலங்கையின் ஏற்றுமதித் துறை மீள்தன்மையையும் வளர்ச்சியையும் காட்டியுள்ளது.

குறித்த சில காலக்கட்டத்தில் இலங்கையின் மொத்த ஏற்றுமதி வருவாய் 12,986.56 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

2024 ஆம் ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 7 சதவீத வலுவான அதிகரிப்பை பிரதிபலிப்பதாக ஏற்றுமதி அபிவிருத்தி சபை தனது அண்மைய அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த செப்டெம்பரில் மட்டும் பொருட்கள் மற்றும் சேவைகள் இரண்டையும் உள்ளடக்கிய மொத்த ஏற்றுமதிகள் 1,469.75 மில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிப்படுத்தியுள்ளது.

இது 2024 செப்டெம்பர் மாதத்தை விட ஆண்டுக்கு 12.33 சதவீத வளர்ச்சியை பிரதிபலிக்கிறது.

lankatruth

 


Post a Comment

0 Comments