
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் இந்தியா 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. 2வது போட்டியில் அக்டோபர் 23ஆம் தேதி இந்திய நேரப்படி காலை 9:00 மணிக்கு அடிலெய்ட் நகரில் துவங்கியது.
அப்போட்டியில் டாஸ் அதிர்ஷ்டத்தை வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து ஆட்டத்தை துவங்கிய இந்திய அணிக்கு கேப்டன் சுப்மன் கில் 9 ரன்னில் அவுட்டான நிலையில் அடுத்து வந்த விராட் கோலி மீண்டும் டக் அவுட்டானார். அதனால் 17/2 என ஆரம்பத்திலேயே இந்தியா தடுமாறிய போது ரோஹித் சர்மா நிதானமாக விளையாடினார்.
அவருடன் இணைந்த ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 3வது விக்கெட்டுக்கு 113 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடியில் ரோஹித் சர்மா அரை சதமடித்து 73 ரன்கள் குவித்து விக்கெட்டை இழந்தார். அவருடன் இணைந்து விளையாடிய ஸ்ரேயாஸ் தம்முடைய பங்கிற்கு அரை சதத்தை அடித்து 61 ரன்களில் அவுட்டானார்.
அடுத்ததாக 265 ரன்களை துரத்திய ஆஸ்திரேலியாவுக்கு கேப்டன் மிட்சேல் மார்ஷ் 11 ரன்களில் அவுட்டானார். மறுபுறம் இந்தியாவை அடித்து நொறுக்கக்கூடிய டிராவிஸ் ஹெட் 28 ரன்களில் ஹர்ஷித் ராணா வேகத்தில் விக்கெட்டை இழந்தார். அடுத்து வந்த மேத்தியூ ஷார்ட் நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்திய நிலையில் எதிர்புறம் வந்த மாட் ரென்ஷா 30 ரன்னில் சொல்லில் அவுட்டானார்.
அடுத்ததாக அலெக்ஸ் கேரி 9 ரன்னில் அவுட்டான போதிலும் மறுபுறம் இந்தியாவுக்கு சவாலைக் கொடுத்த ஷார்ட் அரை சதமடித்து 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஆனால் அடுத்ததாக கூப்பர் கோன்லியுடன் ஜோடி சேர்ந்த மிட்சேல் ஓவன் அதிரடியாக 36 (23) ரன்கள் குவித்து திருப்புமுனையை உண்டாக்கி அவுட்டானார். அதனால் சேவியர் பார்லெட் 3, ஸ்டார்க் 4 ரன்களில் அவுட்டானாலும் மறுபுறம் அசத்திய கூப்பர் கோன்லி 61* (53) ரன்கள் அடித்து 46.2 ஓவரில் போட்டியை முடித்தார்.
அதனால் 2 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற ஆஸ்திரேலியா 2 – 0* (3) கணக்கில் இத்தொடரையும் ஆரம்பத்திலேயே வென்றது. மறுபுறம் அர்ஷ்தீப், ராணா, சுந்தர் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகள் எடுத்தும் போராடி தோற்ற இந்தியா தொடரை இழந்தது. அத்துடன் 17 வருடங்கள் கழித்து அடிலெய்ட் மைதானத்தில் ஒருநாள் போட்டியில் தோல்வியை சந்தித்தது. கடைசியாக 2008ஆம் ஆண்டு இங்கு ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோற்றிருந்தது. இப்போட்டியில் ஷார்ட் கொடுத்த கேட்ச்சை சிராஜ் கோட்டை விட்டதும் பேட்டிங்கில் 300 ரன்கள் எடுக்காததும் தோல்விக்கு வித்திட்டது.
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments