Ticker

6/recent/ticker-posts

மனைவியிடம் 20 வருடங்களாக பேசாத கணவர்..காரணம் கேட்டா-ஆடிப்போவீங்க!


நம்மில் சிலருக்கு கோபம் வந்து விட்டால், யார் வந்து என்ன சமாதானப்படுத்தினாலும், அவ்வளவு எளிதில் இறங்கி வந்து விட மாட்டோம். இருப்பினும், நேரம் எடுக்க எடுக்க அந்த கோபம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும். ஆனால், இங்கு ஒரு மனிதர் தான் காட்டிய பொண்டாட்டியிடமே கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் பேசாமல் இருந்திருக்கிறார். அவர் ஏன் இப்படி செய்தார் என்பது குறி்து இங்கு பார்ப்போம்.

20 வருடங்களாக பேசவில்லை!

ஜப்பானை சேர்ந்த Otou Katayama என்கிற நபர், தனது மனைவி Yumi என்பவரிடம், கிட்டத்தட்ட 20 வருடங்களாக பேசாமல் இருந்துள்ளார். அவர் ஏதாவது கேள்வி கேட்டால், அதற்கு எப்படி பதில் சொல்வாராம் தெரியுமா? உருமிக்காட்டி அல்லது இரும்பி காட்டிதான். அப்படி இருக்கும் போதும், தன் குழந்தைகளை சரியான தந்தையாக வளர்த்திருக்கிறார்.

குழந்தைகள், “அப்பா நம்மிடம் நன்றாக தானே பேசுகிறார், ஏன் அம்மாவிட்ம மட்டும் பேசுவதில்லை?” என்று யோசித்திருக்கின்ற்னார். ஆனாலும் எதுவும் கேட்காமல் இருந்திருக்கின்றனர்.

2016ஆம் ஆண்டில், இந்த தம்பதியின் மகன் ஒரு ஜப்பானிய டிவி நிகழ்ச்சியின் மூலம் இந்த விஷயத்தை வெளிகொண்டு வந்திருக்கிறார். அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியை சேர்ந்தவர்கள் இந்த பிரச்சனையை தீர்ப்பதாக கூறி, இது குறித்த நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

குறிப்பிட்ட அந்த ஜப்பானிய தொலைக்காட்சியில், சம்பந்தப்பட்ட கணவன் மனையை அழைத்து பேசியிருக்கின்றனர். அப்போது கணவரிடம் ஏன் உங்கள் மனைவியிடம் சரியாக பேசுவதில்லை என்கிற கேள்வி கேட்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவர், தனது மனைவி, தன்னை விட குழந்தைகள் மீது அதிக கவனம் செலுத்துவதால் அவர் மீது கோபமுற்று பேசாமல் இருந்ததாக தெரிவித்து இருக்கிறார்.

பின்னர் மனைவியையும் கணவரையும் ஒன்றாக அமர வைத்து பேச வைத்துள்ளனர். கணவர் இறுகிய முகத்துடன் அமைதியாக அமர்ந்திருக்க, அவரது மனைவி அருகில் வந்து பேச ஆரம்பித்துள்ளார்.  “எப்படி இருக்கிறீர்கள்? உங்களுக்கு என்ன வயது ஆகிறது? உங்களுக்கு பிடித்த கலர் எது? உங்களுக்கு பிடித்த உணவு எது?” என்று பல விஷயங்களை கேட்டிருக்கிறார். பின்னர், “நான் என் உணர்ச்சிகளை உங்களிடம் சொல்லப்போகிறேன். உங்களிடம் பேச விரும்பிகிறேன். அருகில் இருக்கும் பார்க்கில் காத்துக்கொண்டிருக்கிறேன். நீங்கள் வருவீர்களா?” என்று கேட்டார்.

பார்க்கில் சந்தித்த இருவரும், பேச ஆரம்பித்திருக்கின்றனர். இதை அவர்களின் பிள்ளைகள் தூரமாக நின்று பார்த்துக்கொண்டு நின்றிருக்கின்றனர். பின்னர் கணவர் தன் மனைவியிடம் பேச ஆரம்பித்திருக்கிறார். “எப்படியோ நாம் பேசி இத்தனை ஆண்டுகள் ஆகி விட்டது. உனக்கு குழந்தைகள் மீது அதிக அக்கறை இருந்தது. இப்போது வரை நாம் எத்தனையோ தடைகளை தாண்டி வந்திருக்கிறோம். இனி வருவதையும் சேர்ந்து எதிர்கொள்வோம் என்று நம்புகிறேன். இனி நாம் பேசலாம் என்று நினைக்கிறேன்” என்று கூறினார்.

இப்படி, தன் மனைவியிடம் 20 ஆண்டுகளாக பேசாமல் இருந்த ஒரு நபர், இறுதியில் தன் மெளன விரதத்தை முடித்திருப்பது குறித்து சில நாட்கள் சமூக வலைதளம் பேசிக்கொண்டே இருந்தது. இது நடந்து, பல ஆண்டுகளும் ஆகி விட்டது. இப்போது, மீண்டும் திடீரென இந்த சம்பவம் குறுத்து சமூக வலைதளத்தில் பலரும் பேசி வருவது குறிப்பிடத்தக்கது.

zeenews

 


Post a Comment

0 Comments