Ticker

6/recent/ticker-posts

30 பாதாள உலக தாதாக்களின் சொத்துக்கள் பற்றிய விசாரணை சூடுபிடித்துள்ளது…


ஒழுங்கமைந்த குற்றச் செயல்களில் ஈடுபட்ட ஏறக்குறைய 30 பேரின் சட்டவிரோத சொத்து பற்றிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கெஹெல்பத்தர பத்மே என்பவருக்குச் சொந்தமான அவ்வாறான உடைமைகள் சில அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதன்படி, கம்பஹா கெஹெல்பத்தர பிரதேசத்தில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள 28 பர்ச் காணி முடக்கப்பட்டுள்ளது.

அதுபோல, லொகு பெடீ எனப்படுபவருக்குச் சொந்தமான சட்டவிரோத சொத்துக்களும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அந்த சொத்துக்கள் பற்றி பணதூய்தாக்கல் ஒழிப்பு சட்டத்தின் கீழ் நீதிமன்றத்திற்கு விடயங்களை சமர்ப்பிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

lankatruth

 


Post a Comment

0 Comments