
அமெரிக்காவின் KRATOS Defense & Security Solutions நிறுவனம், உலகின் முதல் செயற்கை நுண்ணறிவால் (AI) இயக்கப்படும் போர் விமானத்தை உருவாக்கியுள்ளது.
XQ-58A Valkyrie எனப்படும் இந்த விமானம், பைலட் இல்லாமல் இயங்கும் தன்மை கொண்டது. மேலும், இது ரன்வே தேவையில்லாமல் நிலத்திலிருந்து நேரடியாக புறப்படும் திறன் பெற்றது.
அமெரிக்க தடைகளை மீறி ரஷ்ய எண்ணெய் இறக்குமதி தொடரும் - இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உறுதி
இந்த விமானம் முழுமையாக AI தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது மனித பைலட் இல்லாமல் தானாகவே பறக்க, தாக்குதல் நடத்த மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திறன் கொண்டது.
வழக்கமான போர் விமானங்களைவிட குறைந்த செலவில் தயாரிக்கப்படும் இது, எதிர்கால போர் நடவடிக்கைகளில் முக்கிய பங்கு வகிக்கவுள்ளது.
XQ-58A Valkyrie விமானம் stealth தொழில்நுட்பம், விரைவான பறக்கும் திறன், தானாகவே முடிவெடுக்கும் AI செயல்பாடுகள் போன்ற பல முன்னேற்றங்களை கொண்டுள்ளது.
இது US Air Force மற்றும் US Navy ஆகியவற்றின் Skyborg திட்டத்தின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த விமானம் பாதுகாப்பு துறையில் புரட்சி ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. எதிர்காலத்தில், மனித பைலட் இல்லாமல் போர் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் புதிய யுகம் தொடங்கும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
lankasri

கட்டுரைகள் |  Ai SONGS |

Email;vettai007@yahoo.com



0 Comments