Ticker

6/recent/ticker-posts

உலகக் கிண்ணத்தில் நேபாளம், ஓமான்


2026 இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத்துக்கு நேபாளமும், ஓமானும் தகுதி பெற்றுள்ளன. இன்னுமொரு அணிக்கான இடம் மாத்திரமே இன்னுமுள்ளது.

பெரும்பாலும் ஐக்கிய அரபு அமீரகம் இறுதி அணியாக உலகக் கிண்ணத்துக்கு தகுதி பெறுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவும், இலங்கையும் உலகக் கிண்ணத்தை நடாத்தும் நாடுகளாக தகுதி பெற்றதுடன், முன்னணி ஏழு நாடுகளாக ஆப்கானிஸ்தான், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, ஐக்கிய அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் தகுதி பெற்றிருந்தன. தரவரிசைப்படி அயர்லாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் தகுதி பெற்றதுடன், அமெரிக்க தகுதிகாண் போட்டிகளில் கனடா தகுதி பெற்றிருந்தது.

ஐரோப்பிய தகுதிகாண் போட்டிகளில் இத்தாலி, நெதர்லாந்தும், ஆபிரிக்க தகுதிகாண் போட்டிகளில் நமீபிய, சிம்பாப்வேயும் தகுதி பெற்றிருந்தன.

tamilmirror

 


Post a Comment

0 Comments