
உலகின் மிக உயரமான கட்டிடமான துபாயின் புர்ஜ் கலிபா கட்டிடத்தை கட்டிய முகமது அலாபர் என்பவர் மீனவரின் மகன் என்ற தகவல் பலரும் அறிந்திருராதது.
தனது விடாமுயற்சி உழைப்பால் சாதித்துள்ள முகமது அலாபார் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது
முகமது அலி அலாபார் என்பவர் ஐக்கிய அரபு அமீரகத்தைச் (UAE) சேர்ந்த ஒரு தொழிலதிபர் மற்றும் முதலீட்டாளர் ஆவார். உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபா (Burj Khalifa) மற்றும் துபாய் மால் (Dubai Mall) போன்ற உலகப் புகழ்பெற்ற திட்டங்களின் வளர்ச்சிக்குப் பின்னால் இருந்த முக்கிய நபர் இவர்தான்.
மொஹமத் அலாபார், துபாயைத் தளமாகக் கொண்ட ரியல் எஸ்டேட் மேம்பாட்டு நிறுவனமான ஈமார் பிராப்பர்ட்டீஸ் (Emaar Properties)-ன் நிறுவனர் மற்றும் தலைவராக இருந்தார்.
புர்ஜ் கலிஃபா திட்டத்தை ஆரம்பித்து, அதற்கான நிதியைத் திரட்டி, அதைக் கட்டடமாக வடிவமைத்து மேம்படுத்திய நிறுவனம் ஈமார் பிராப்பர்ட்டீஸ் ஆகும்.
நவம்பர் 8, 1956 அன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் முகமது அலாபார் பிறந்தார். இவர் 12 குழந்தைகளில் மூத்தவர். இவருடைய தந்தை ஒரு பாரம்பரிய மீனவர் ஆவார்.
1970-களில் அரசு உதவித்தொகை பெற்று அமெரிக்காவின் சியாட்டில் பல்கலைக்கழகத்தில் படித்தார். 1981-இல் வணிக நிர்வாகத்தில் பட்டம் பெற்றார்.
கல்லூரிக்குப் பிறகு, அமீரகத்தின் மத்திய வங்கியில் (Central Bank of the UAE) வங்கி மேலாளராகத் தனது வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், துபாயின் பொருளாதார மேம்பாட்டுத் துறையின் நிறுவன இயக்குநர் ஜெனரலாகப் பணியாற்றினார். எளிய குடும்பத்தை பின்புலமாக கொண்ட அலாபாரின் வளர்ச்சி பல இளைஞர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதாக பிரபல செய்தி தளங்கள் பாராட்டியுள்ளன.
news18

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com
0 Comments