
சைனாடவுன் வட்டாரத்தில் 38 வயதுப் பெண்ணைக் கொலை செய்த சந்தேகத்தில் 41 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
(24 அக்டோபர்) காலை 7.40 மணிக்குக் காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
சந்தேக நபர் தாமாகப் புக்கிட் மேரா ஈஸ்ட் வட்டாரக் காவல் நிலையத்துக்குச் சென்று தகவல் அளித்தார்.
தம்முடைய மனைவியைக் கொன்றதாக அவர் கூறினார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன் பின்னர் சௌத் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள ஹோட்டல் அறைக்குச் சென்ற அதிகாரிகள் பெண் மாண்டுகிடப்பதைக் கண்டனர்.
181 சௌத் பிரிட்ஜ் ரோட்டில் உள்ள Capri by Fraser China Square ஹோட்டலில் பெண் காணப்பட்டதாக CNA நம்புகிறது.
சந்தேக நபர் மீது நாளை குற்றஞ்சாட்டப்படும்.
விசாரணை தொடர்கிறது.
seithi

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com



0 Comments