
இங்கிலாந்து கிரிக்கெட் அணி கடைசியாக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் விளையாடியது. விராட், ரோஹித் உள்ளிட்ட சீனியர்கள் இல்லாததால் அத்தொடரில் கில் தலைமையிலான இளம் இந்திய அணி படுதோல்வியைச் சந்திக்கும் என்று பல முன்னாள் இங்கிலாந்து வீரர்கள் கணித்தனர். ஆனால் ஆரம்பம் முதலே இங்கிலாந்துக்கு சவாலைக் கொடுத்த இந்தியா தொடரை சமன் செய்தது.
குறிப்பாக கடைசிப் போட்டியின் கடைசி நாளில் இந்தியா இந்தியா கண்டிப்பாக தோற்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நாளில் நெருப்பாக பந்து வீசிய இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் மிராக்கள் வெற்றி பெற்றது. அதற்கு முந்தைய நாளில் ஹாரி ப்ரூக் கொடுத்த கேட்சை பிடித்த சிராஜ் பவுண்டரியில் காலை வைத்தார்.
அதைப் பயன்படுத்தி இந்தியாவை வெளுத்த ஹாரி ப்ரூக் – ஜோ ரூட் சதத்தை இங்கிலாந்து வெற்றிப் பாதைக்கு அழைத்து வந்தனர். அதனால் கதை முடிந்தது என்று நினைத்த போது கடைசி நாளில் அதே முகமது சிராஜ் அற்புதமாக பந்து வீசி இந்தியாவுக்கு மறக்க முடியாத வெற்றியைப் பெற்றுக் கொடுத்தார். அதன் காரணமாக 2 – 2 (5) என்ற கணக்கில் தொடரை சமன் செய்த இந்திய அணி தங்களை குறைத்து மதிப்பிட்ட இங்கிலாந்தினருக்கு பதிலடி கொடுத்தது.
இந்நிலையில் அத்தொடரில் 25 நாட்களும் சவாலை கொடுத்த இந்தியா தங்களது வெற்றியைப் பறித்ததிலிருந்து இன்னும் மீள முடியவில்லை என்று ஹாரி ப்ரூக் தெரிவித்துள்ளார். அடுத்ததாக ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஆஷஸ் தொடர் இந்திய தொடரை மிஞ்சினால் மகிழ்ச்சியாக இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்ருமாறு. “நான் எதில் கால் வைக்கிறேன் என்பது எனக்குத் தெரியவில்லை”
“ஆஷஸ் மிகப்பெரியது என்பது எனக்குத் தெரியும். ஆனால் இப்போதும் நான் அந்த இந்திய தொடரிலிருந்து மீண்டு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். அத்தொடரின் ஒரு பகுதியாக இருந்தது அருமையாக இருந்தது. அங்கே 25க்கு 25 நாட்கள் விளையாடியது மெகா சவாலாக இருந்தது. இதுவரை நான் விளையாடியதிலேயே அது தான் மிகவும் தீவிரமான தொடராகும்”
“ஒருவேளை ஆஷஸ் அதைத் தாண்டி மேலே வந்தால் அதற்காக நான் மகிழ்ச்சியான மனிதனாக இருப்பேன்” என்று கூறினார். அத்துடன் காயம் காரணமாக ஆஸ்திரேலிய கேப்டன் பட் கமின்ஸ் ஆரம்பக்கட்ட போட்டிகளில் விளையாட மாட்டார் என்ற செய்திகள் காணப்படுகின்றன. எனவே அதைப் பயன்படுத்தி இம்முறை ஆஸ்திரேலியாவை சொந்த மண்ணில் தோற்கடித்து இங்கிலாந்து ஆஷஸ் கோப்பையை வெல்லும் என்று ப்ரூக் நம்பிக்கை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.ஆஸ்திரேலிய கிரிக்கெட் பொருட்கள்
crictamil

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments