
தென் அமெரிக்காவில் இருக்கும் நாடுகளில் ஒன்று, சிலி. இங்குதான் இந்த வினோத சம்பவமானது நடந்திருக்கிறது. இது குறித்த முழு விவரம் குறித்து இங்கே பார்ப்போம்.
தவறுதலாக கிரெடிட் ஆன சம்பளம்!
சிலி நாட்டை சேர்ந்த நபர் ஒருவருக்கு, அவரது நிறுவனம், சம்பளத்தை 300 மடங்கு அதிகமாக கிரெடிட் செய்துள்ளது. சம்பந்தப்பட்ட இந்த ஊழியர், அலுவலக உதவியாளராக பணியாற்றி இருக்கிறார். அவர் வேலை பார்த்த நிறுவனத்தின் பெயர், Dan Consorcio Industrial de Alimentos de Chile என்பதாகவும். இவருக்கு மாத சம்பளமாக சுமார் 386 பவுண்டுகள் அதாவது, இந்திய ரூபாய் மதிப்பின் படி, 46,162 வழங்கப்பட்டு வந்துள்ளது.
2022ஆம் ஆண்டு மே மாதம் pay roll-ல் ஏற்பட்ட குளறுபிடி காரணமாக, இவருக்கு 127,000 பவுண்ட்கள் கிரெடிட் செய்யப்பட்டுள்ளது. இது, இந்திய மதிப்பின்படி, ரூ.1,51,88311 ஆகும்.
3 வருட வழக்கு..
ஆரம்பத்தில், தான் அந்த பணத்தை திருப்பி தந்து விடுவதாக அவர் கூறியிருக்கிறார். ஆனால், 3 நாட்களுக்குள்ளாகவே தன் வேலையை ராஜினாமா செய்திருக்கிறார். வேலை செய்யும் இடத்தில் இருந்து போன் வந்த போதும் அவர் அதை எடுத்து பேசவில்லை. பின்னர், அந்த நிறுவனமே அவர் மீது நீதிமன்றத்தில் திருட்டு வழக்கு தொடுத்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளாக, இது குறித்த வழக்கு விசாரணை நடந்து வந்துள்ளது. சாண்டியாகோவில் உள்ள ஒரு நீதிபதி, இந்த சம்பவம் திருட்டுக்கு சமமானதல்ல என்றும், அதற்கு பதிலாக அதை "அங்கீகரிக்கப்படாத சேகரிப்பு" என்று வகைப்படுத்தி தீர்ப்பளித்தார். இதன் விளைவாக, வழக்கை குற்றவியல் வழக்காக அதற்கு மேல் தொடர முடியாமல் போயுள்ளது.
ஜாக்பாட்!
நீதிமன்றம் இதை திருட்டு வழக்காக ஏற்றுக்கொள்ளவில்லை என்றாலும், சம்பந்தப்பட்ட நிறுவனம், அந்த காசை சட்டத்தின் வழியே வாங்க முயற்சி செய்தூள்ளது. தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவும், ரத்து செய்வதற்கான அனைத்து சாத்திய சட்ட நடவடிக்கைகளையும் எடுப்போம் என்று அந்த நிறுவனம் சூளுரைத்திருக்கிறது. இப்படி தவறுதலாக வந்த பணத்தை, நீதிமன்றம் வரை சென்று வைத்துக்கொள்ள, அந்த நபர் எந்த ஜென்மத்தில் என்ன புண்ணியம் செய்தாரோ என்று பலரும் பேசி வருகின்றனர்.
zeenews

கட்டுரைகள் | Ai SONGS |

Email;vettai007@yahoo.com




0 Comments