Ticker

6/recent/ticker-posts

இரண்டு தேங்காய்களுக்காக கொலை செய்த பிரதிவாதிக்கு மரண தண்டனை…


இரண்டு தேங்காய்களை திருடினார் என்று ஒருவரை தேங்காய் மட்டை உரிக்கும் கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதில் குறித்த நபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டிருந்த பிரதிவாதிக்கு ஹோமாகம மேல்நீதிமன்ற நீதவான் நவரத்ன மாரசிங்க மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.

2001 ஆம் ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி நியதகல வயல்வெளியில் வைத்து தேங்காய் மட்டை உரிக்கும் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்தற்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்திருந்த குற்றப்பகர்வு வழக்கை விரிவாக விவாதித்த பின்னர் மேற்கண்ட தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வழக்கை விசாரித்த போது, திடீர் கோபத்தினாலோ அல்லது தவறுதலாகவோ இக்கொலை செய்யப்படவில்லை என்பது நீதவானால் உறுதி செய்யப்பட்டு, பிரதிவாதிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

lankatruth

 


Post a Comment

0 Comments