Ticker

6/recent/ticker-posts

அல் அஸ்லாப் முன்னோர்கள் நினைவு மன்றம் நடாத்தும் மூன்றாம் நிகழ்வு!


மனித சமூகத்தின் வேர்கள் அதன் முன்னோர்களில் தொடங்குகின்றன. அவர்கள் செய்த தியாகங்கள், பணிகள், மற்றும் சமூக சேவைகள் தலைமுறைகள் கடந்தும் ஒளிர்ந்து நிற்கின்றன. அந்த ஒளியை மீண்டும் உயிர்ப்பித்து, புதிய தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் உயர்ந்த நோக்குடன் “AL ASLAF FOREBEAR MEMORIAL FORUM” தொடர்ந்து தனது பணியை ஆற்றிக் கொண்டிருக்கிறது.

இந்நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும் மூன்றாம் நிகழ்வு எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு, நமது சமூகத்திற்கு பெருமை சேர்த்த மூன்று சிறந்த முன்னோர்களின் நினைவுகளை எடுத்துரைக்கும் ஒரு அரிய வாய்ப்பாகும்.

"ஏற்கனவே நடைபெற்ற இரண்டு நிகழ்வுகளும் இலங்கை மக்களின் அமோக ஆதரவைப்பெற்று மென்மேலும் இதுபோன்ற நிகழ்வுகளை நடாத்த உத்வேகம் கிடைத்ததாக தலைவர் M.H.M.NIYAS அவர்கள் தெரிவித்துள்ளார்.

உண்மையும் அதுதான் .

இன்றைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு நம் முன்னோர்களைப் பற்றிய விபரங்களை எடுத்துச் சொல்வது  நம் ஒவ்வொருவரினதும் மிகப்பெரும் பொறுப்பாகும்.

இந்நிலையில் இந்த மிகப்பெரும் பொறுப்பை ஏற்றுள்ள  “அல் அஸ்லாப் முன்னோர்கள் நினைவு மன்றம்”நிறுவனத்துக்கு இலங்கை மக்கள் அனைவரும் ஆதரவு கொடுக்கவேண்டும்.அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

எதிர்வரும் 25ஆம் திகதி நடைபெறவுள்ள இந்தமூன்றாம் நிகழ்வு, நமது சமூகத்திற்கு பெருமை சேர்த்த மூன்று சிறந்த முன்னோர்களின் நினைவுகளை எடுத்துரைக்கும் ஒரு அரிய வாய்ப்பாகும்.


1.மர்ஹூம் அபூபுக்கர் மொஹமட் அப்துல் அஸீஸ்

( மர்ஹூம்,ஏ. எம். ஏ. அஸீஸ்; அக்டோபர் 1911 – 24 நவம்பர் 1973)

இலங்கையின் முக்கிய கல்வியாளர், அரசு அதிகாரி, சமூகப் பணியாளர் மற்றும் *செனட் ஆஃப் இலங்கை* உறுப்பினராக பணியாற்றியவர்.ஏ. எம். ஏ. அஸீஸ் அவர்கள் கல்வித் துறையில் ஆற்றிய பங்களிப்புகள் அளப்பரியது.
அவர் சமுதாய முன்னேற்றத்திற்கும் முஸ்லிம் இளைஞர்களின் கல்வி வளர்ச்சிக்கும் பெரும் உழைப்பைச் செய்தார். சமூக ஒற்றுமை, பண்பாடு மற்றும் அறிவு ஆகியவற்றின் இணைப்பை வலியுறுத்தியவர்.அவரின் வாழ்க்கை எளிமையும் சேவையும் பிரதிபலிக்கும் ஒரு பாடமாகும்.

2.மர்ஹூம் மௌலவி எம். ஜே. எம். றியாழ் (கபூரி)
அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா சபையின் முன்னாள் பொதுச் செயலாளர்

மௌலவி எம்.ஜே.எம். றியாழ் (கபூரி) அவர்கள் இஸ்லாமிய கல்வி, மார்க்க ஒருமைப்பாடு மற்றும் சமூக வழிகாட்டலில் முன்னோடியாக இருந்தவர்.அவர் *அகில இலங்கை ஜமிய்யத்துல் உலமா*வை தேசிய ரீதியில் மக்களுக்குள் கொண்டு சேர்த்தார். முஸ்லிம்கள் அனைவரும் ஒரே குடையின் கீழ் இணைந்து வாழ வேண்டும் என்ற எண்ணத்துடன் தன் வாழ்நாளை அர்ப்பணித்தார்.

அவர்  *கபூரியா அரபுக் கல்லூரி*யில் கல்வி கற்றார். கல்வித் தரம், பாடவிதானம், நாகரிகம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து மாணவர்களை முழுமையான இஸ்லாமிய அடிப்படையுடன் உருவாக்கியவர்.

அவருக்கு எதிராக பல சவால்களும் நீதிமன்ற வழக்குகளும் வந்தபோதும், அவற்றை தைரியமாக எதிர்கொண்டு, புனித இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக உழைத்தார். அவரது மறைவு முஸ்லிம் சமூகத்திற்கு மிகப்பெரிய இழப்பாகும்.

3.மர்ஹூம் அல் ஹாஜ் தேசபந்து SIR ஏ. டபிள்யூ.எம். அமீர்

(25 அக்டோபர் 2001 அன்று காலமானார்)

தொழிலதிபர், தூதர், மற்றும் சமூக நலனுக்காக வாழ்ந்த உண்மையான தலைமை நாயகர்.

Sir அமீர் அவர்கள் *ஹோட்டல் ரன்முத்து*வின் தலைவராக இருந்தபோது, இலங்கையின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் சென்றார்.அவர் டொமினிகன் குடியரசின் கௌரவ தூதராக 40 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி, இலங்கை மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கிடையில் நட்புறவை வலுப்படுத்தியவர்.

அவரது நீண்ட கால தூதரகச் சேவையைப் பாராட்டி, டொமினிகன் அரசு அவருக்கு “Sir ” பட்டத்தை வழங்கியது.Sir அமீர் இலங்கையின் பல முக்கிய சமூக அமைப்புகளிலும் தலைமைப் பொறுப்புகள் வகித்தார் கொழும்பு ரோட்டரி சங்கம், இலங்கை ஆங்கில ஒன்றியம், அகில இலங்கை Moors Association, போன்றவற்றில் அவர் ஆற்றிய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.

அவர் அரசியல் வெளியில் நேரடியாக நின்றவர் அல்லாதபோதும், பல முஸ்லிம் அரசியல்வாதிகளை ஆதரித்து, சிறுபான்மை சமூகத்தின் நலனுக்காக குரல் கொடுத்தவர்.

அவர் நிறுவிய "அகதிகள் நிவாரண அமைப்பு (RRO)" மூலம் பல அகதி முகாம்களில் சேவை செய்து மனிதாபிமானத்தின் ஒளியை பரப்பினார்.

 முன்னோர்களின் கனவுகள் – புதிய தலைமுறையின் பொறுப்பு

முன்னோர்களின் வாழ்க்கை ஒரு வரலாறு அல்ல ,அது ஒரு வழிகாட்டும் விளக்கு. அவர்கள் எங்களை உருவாக்கியவர்கள், அவர்களின் உழைப்பால் நமது சமூகத்தின் அடித்தளம் கட்டப்பட்டது.

அந்த தியாகங்களை நினைவு கூறி, அவர்களின் கனவுகளை புதிய தலைமுறைக்கு பரிமாறுவதே நம் கடமை.

இதனைச் செய்யும் “அல் அஸ்லாப் முன்னோர்கள் நினைவு மன்றம்” நிறுவனம் உண்மையாகவே பாராட்டத்தக்கது. சமூகத்தின் வேர்களை நினைவு கூறி, ஒற்றுமை, கல்வி, சேவை, மற்றும் நற்பண்புகள் எனும் நான்கு தூண்களையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது அவர்களின் செயல் நோக்கம்.

இந்நிகழ்வு நமது இளம் தலைமுறைக்கு ஒரு விழிப்புணர்வு. முன்னோர்களின் பாதையில் நடப்பது, சமுதாயத்தின் உயர்விற்கான உண்மையான வழி என்பதை உணர்த்துகிறது.

முன்னோர்களின் நினைவுகளை உயிரோடு வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் “அல் அஸ்லாப் முன்னோர்கள் நினைவு மன்றம்” செய்கின்ற இந்த முயற்சி சமூகத்தின் என்றென்றும் நிலைத்திருக்கும்.

அல்லாஹ் தாலா இந்த உன்னத முயற்சியை ஏற்று, மறைந்த முன்னோர்களின் ஆத்துமாக்களுக்கு ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் வழங்குவானாக. ஆமீன். 


குறிப்பு:

உலகெங்கும் லட்சக்கணக்கான தமிழ் பேசும் வாசகர்களைக் கொண்டுள்ள வேட்டை தனது 10வது ஆண்டில் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் "அல் அஸ்லாப் முன்னோர்கள் நினைவு மன்றம்(“AL ASLAF FOREBEAR MEMORIAL FORUM” )"ஏற்றுள்ள இந்த மாபெரும் முயற்சியில் எமது பங்களிப்பும் இருப்பதையிட்டு பெருமைப் படுகின்றோம்.


ஆசிரியர்
வேட்டை

 


Post a Comment

0 Comments