Ticker

6/recent/ticker-posts

முதல்முறையாக Gen Z போராட்டத்திற்கு ராணுவம் ஆதரவு! - மடகாஸ்கரில் ஆட்சிக்கவிழ்ப்பு!


இந்தோனேஷியா, நேபாளம் என பல நாடுகளில் பெரும் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திய இளைஞர்களின் Gen Z போராட்டம் சமீபத்தில் மடகாஸ்கரிலும் வெடித்தது. மடகாஸ்கர் நாட்டில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு, மின்சார துண்டிப்பு உள்ளிட்டவற்றை கண்டித்து அதிபர் ஆண்ட்ரே ரஜோலினா ஆட்சிக்கு எதிராக இளைஞர்கள் போராட்டம் வெடித்துள்ளது.

ஆரம்பத்தில் அவர்களை கட்டுப்படுத்த ராணுவம் கட்டவிழ்க்கப்பட்ட நிலையில் ஏற்பட்ட வன்முறையில் 4 பேர் பலியானார்கள். தொடர்ந்து 2 வாரங்களாக நடந்து வரும் இந்த ஜென் ஸீ போராட்டத்தில் தற்போது மடகாஸ்கர் ராணுவத்தின் CAPSAT பிரிவு போராட்டக்காரர்களோடு சேர்ந்துள்ளது.

மேலும் மடகாஸ்கரில் ஆட்சிக்கவிழ்ப்பு செய்து ராணுவம் ஆட்சியை கைப்பற்ற திட்டமிட்டு வருவதாக அதிபர் ரஜோலினா இதுகுறித்து குற்றம் சாட்டியுள்ளார். போராட்டக்காரர்களோடு ராணுவம் கைசேர்வது ஜென் ஸீ போராட்டங்களில் இதுவே முதன்முறையாகும். 

webdunia

 


Post a Comment

0 Comments