Ticker

6/recent/ticker-posts

போதைக்கு மனதை கொடுத்த 1264 பேர் பொலிஸ் வலையில்…


முழு நாடுமே ஒன்றாக தேசிய செயற்பாட்டின் கீழ் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படுகின்ற சுற்றி வளைப்பின் போது, நேற்றைய தினம் (03) 1264 போதைப்பொருள் கள்ளவியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்த போதைப்பொருள் தடுப்பு செயற்றிட்டம் நாடு முழுவதும் செயற்படுத்தப்படுகிறது.

அதன்படி, 909 கிராம் 82 மில்லிகிராம் ஹெரோயினுடன் 455 பேரும், 1 கிலோ 227 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் 432 பேரும், 4 கிலோ 793 கிராம் கஞ்சா மற்றும் 70, 580 கஞ்சா செடிகளுடன் 299 பேரும், 2 கிலோ 82 கிராம் குஷ், 12 கிலோ 301 கிராம் ஹஸீஸ், 659 கிராம் 05 மில்லிகிராம் போதைப்பொருள் வில்லைகள், 659 கிராம் 05 மில்லிகிராம் மதனபோதகம் மற்றும் 10 கிராம் 748 மில்லிகிராம் மாவா ஆகிய போதைப்பொருட்களுடன் 87 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட 1264 பேருடன், குற்றச் செயல்களின் வரும்படிகள் பற்றிய விசாரணையில் ஒருவரும், தடுப்பு உத்தரவு பெற்றுக்கொண்ட சந்தேக நபர்கள் 32 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, சுற்றி வளைப்பில் மொத்தமாக 1273 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

8 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

lankatruth

 


Post a Comment

0 Comments